அவனது அமைச்சரவையே காட்டும்

“கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம்
மலைப் பெயல் காட்டும் துணை..”

ஆற்றில் வரும் பெருவெள்ளம் மலையில் பெய்த மழையின் அளவினை சொல்லும், நல்ல தலைவனின் கல்வியின் அளவை அவன் நிர்வாகத்தை, செல்வ‌ பெருக்கத்தை நீதி கூறும் முறையையும் அவனது அமைச்சரவையே காட்டும்