அவனுகளும் அவனுக தத்துவமும்…
ராபர்ட் தே நோபிலி எனும் பாதிரி காவி உடை உடுத்தும்பொழுது கிறிஸ்தவருக்கு கோபம் வரவில்லை
அந்த வீரமாமுனிவர் காவி கட்டி நான் காவி கிறிஸ்தவன் என சொல்லும் பொழுது வணங்கினார்கள்
தெற்கே அந்த தேவசகாயம்பிள்ளை என்பவரும் காவி வேட்டி கட்டி நான் கிறிஸ்தவ சன்னியாசி என்றபொழுது கண்ணீர் விட்டார்கள்
இன்றும் வேளாங்கண்ணி கோவிலுக்கும் புளியம்பட்டி அந்தோணியார் கோவிலுக்கும் காவி கட்டி செல்வோருக்கு நீர் கொடுத்து வழியனுப்புகின்றார்கள்
ஆனால் வள்ளுவனுக்கு காவி கட்டினால் கோபம் பொத்துகொண்டு வருமாம், வள்ளுவன் எல்லோருக்கும் பொதுவானவனாம்
எப்படி பொதுவானவர்?
இந்நாட்டு முழு இந்து நாடு, இந்நாட்டு கலாச்சாரம் முழு இந்து கலாச்சாரம். இங்கு பெரும்பான்மையும் மொத்தமும் அவர்கள்தான்
இந்நாட்டை துண்டு துண்டாக உடைத்தால் கூட கோவா தவிர எல்லா பகுதியும் இந்து நாடாகத்தான் மலரும் சந்தேகமில்லை, அதை உறுதியிட்டு சொல்லலாம்
ஆக அந்த நாட்டில் இருந்துகொண்டு மிக சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தை நோக்கி இது எல்லோருக்கும் சமமான நாடு எல்லாமே பொது அடையாளம் என்பதெல்லாம் ஏற்கமுடியாத வாதம்
இன்னொரு நாட்டில் இதெல்லாம் சாத்தியமே அல்ல
இந்த நாடும் பொதுவாம், இந்த வள்ளுவனும் பொதுவாம் இன்னும் எல்லாம் பொதுவாம். ஆனால் அவர்களுக்கு மட்டும் சிறுபான்மையினர் சலுகை வேண்டுமாம்
சரி பொதுவாக வைக்கலாம் பொது சிவில் சட்டம் ஏற்றுகொள்வீர்களா என்றால் அய்யய்யோ நாங்கள் சிறுபான்மையினர் என ஓடிவிடுவார்கள்
எதெல்லாம் அவர்களுக்கு பாதகமோ அப்பொழுதுதெல்லாம் இந்நாடு எல்லோருக்கும் சமமானது என கொடிபிடிக்க வேண்டியது, எதெல்லாம் பாதகமோ அப்பொழுதெல்லாம் சிறுபான்மை போர்வைக்குள் ஒளிந்துகொள்ள வேண்டியது
அவனுகளும் அவனுக தத்துவமும்…