அவனுகளும் அவனுக நியாயமும்..

1971ல் நடந்ததற்கு ஆதாரமே இல்லையாம், ரஜினி சொன்னது எல்லாம் பொய்யாம். சேலத்தில் அப்படி நடந்ததற்கு ஆதாரமில்லையாம்

ஆனால் பார்பான் அட்டகாசம் செய்தது உண்மையாம், கற்க வந்த தாழ்த்தபட்டவன் காதில் ஈயத்தை கதற கதற ஊற்றியது உண்மையாம்

நவீன ரோபோ டெக்னாலஜி, ராக்கெட் டெக்னாலஜி, இந்தியன் பீனல் கோட் எல்லாம் பல்லாயிரம் வருடத்துக்கு முன்பே பிராமணன் கற்று மற்ற சாதிக்கு கொடுக்காததும் உண்மையாம்

சதி, முலைவரி, தேவதாசி இன்னும் எல்லா பிரச்சினைகளும் பிராமணனால் மட்டும் வந்ததாம்

பிராமணன் சாதி ஏற்படுத்தியது உண்மையாம், அவன் சமூக இழிவினை ஏற்படுத்தியது எல்லாம் மகா உண்மையாம்

மற்ற சாதியினர் பூனூலை அவன் பறித்ததும், கல்வி, நீர், உணவு, வீடு என எதுவும் கொடுக்காமல் விரட்டியதெல்லாம் சத்திய உண்மையாம்

சரி அதற்கு ஆதாரம் எங்கே? ஈயம் ஊற்றிய காது எது என கேட்டால் ஆதாரம் தரமாட்டார்களாம் நம்ப வேண்டுமாம்

இவர்கள் வகையாக சிக்கினால் முழு ஆதாரமும் கொடுக்க வேண்டுமாம், ஆனால் இவர்கள் சொல்லும் குற்றசாட்டுக்கு ஆதாரமே இல்லையாம் ஆனால் நம்ப வேண்டுமாம்

அவனுகளும் அவனுக நியாயமும்..