அவன் ஒரே மனிதன்தான்
அய்யன்மீர் , அவன் ஒரே மனிதன்தான், அதில் சந்தேகமில்லை
அவனின் ஐடியினை அவனின் பாகம்பிரியாளுக்கு கூட அவன் கொடுத்ததில்லை
அவன் ஒருவனே, ஆனால் அவனுக்குள் ஏகபட்ட ஆவிகள் வந்து போகின்றன, அதுதான் அவனின் சிக்கல்
திடீரென அவை கழுத்தை பிடித்து இதை எழுது எனஅவனை எழுத வைக்கின்றன
ஒரு ஆவி ஒன்றை எழுதிவிட்டு சென்றபின் இன்னொன்று வந்து தலைகீழாக எழுத சொல்கின்றது
அதில் நேரு முதல் ராஜிவ் வரை பல ஆவிகள் வருகின்றன, சாவர்க்கரும் வருகின்றார் நேதாஜியும் வருகின்றார்
அவனும் சுயநினைவினை மறந்து அரை மயக்கத்தில் அல்லது முழு உற்சாகத்தில் எழுதிவிடுகின்றான்
ஏன் எழுதினான் எதற்கு எழுதினான் என அவனுக்கே தெரியாது, அவனே பல நேரங்களில் அதை நினைத்து வருந்துகின்றான்
அவன் எந்த உணவகத்தை பார்த்தாலும் சாப்பிட துடிப்பதை போல அவனை பிடித்த ஆவிகள் அவை நினைப்பதை எழுத வைக்கின்றன
ஹிட்லரும் வருகின்றான் பெரியாரும் வருகின்றார்
ஆழ்வார்களும் வருகின்றார்கள், ஐன்டீனும் வருகின்றான் , அலெக்ஸாண்டரும் வருகின்றான்
பிரபாகரன் கூட தன் தரப்பு நியாயங்களை எழுத சொல்கின்றான் ஆனால் சீமான் உயிரோடு இருப்பதால் எழுதாதே என ராஜிவ் ஆவி சொல்கின்றது
அவன் என்ன செய்வான் பாவம்,
பலதரபட்ட ஆவிகள் அவனை பிடித்து ஆட்டுகின்றன , குஷ்புவால் தற்கொலை செய்துகொண்ட எவனோ ஒருவனின் ஆவி அவன் தலையில் குத்தாட்டம் போடுகின்றது
அந்த ஆவிகளை திட்டுங்கள், அவனை திட்டாதீர்கள் அவன் பரிதாபதிற்குரியவன்
