அவரின் கைதுக்கும் மேற்படி சமாச்சாரங்களுக்கும் காரணம்

மிசாவில் முக ஸ்டாலினை ஏன் கைது செய்தார்கள் சிறையில் அடைத்தார்கள் என்பதற்கு ஏகபட்ட காட்சிகளை கிளறுகின்றார்கள்

அதில் எதெல்லாம் உண்மை பொய் என பார்த்தால் பெரும்பாலும் பொய்யான தகவல்களே, கலைஞரின் வாரிசாக முரசொலி மாறனைத்தான் உலகம் கண்டது டெல்லி அவரைத்தான் குறிவைத்தது

அதுவும் ராமசந்திரன் விலகிய நிலையில் மாறனே அடுத்தகட்ட தலமை என எல்லோர் கண்ணுக்கும் தெரிந்தார், ஸ்டாலின் எல்லாம் பட்டியலிலே இல்லை

ஆனால் ஆவணபடுத்தபட்ட தகவல் என்னவென்றால் ஏதோ ஒரு இடத்தில் “என் தந்தையின் திட்டபடி விதவைகளுக்கெல்லாம் பென்ஷன் வழங்கபடுகின்றது, இந்திராகாந்தி விண்ணப்பித்தால் அவருக்கும் வழங்கபடும்” என்பது போல் அவர் பேசியிருந்தார்

அதுதான் அவரின் கைதுக்கும் மேற்படி சமாச்சாரங்களுக்கும் காரணம்

அன்று கைது செய்யபடும்பொழுது “அய்யய்யோ கொலை பண்றாங்க… அய்யய்யோ கொலை பண்ண போறாங்க ” போன்ற வீடியோக்கள் எல்லாம் இல்லை, காரணம் அன்று அவர்களிடம் டிவி சேணல் இல்லை