அவரை வாழ்த்துவோம்

படத்தில் இருப்பவர்தான் Omm Prakash, மதுரைக்காரர். கோலாலம்பூரின் பேராசியராக பணியாற்றுகின்றார். ஆண்டவன் கட்டளை சிவாஜி போல கடமையே வெற்றிக்கு வழி என் சொல்லும் நல்லாசிரியர்

இவர் இதே கோட் சூட்டில்தான் எப்பொழுதும் இருப்பார், கேட்டால் “அண்ணே பி.எச்டி செய்றேண்ணே.. எப்போ வேணும்ணாலும் கூப்பிடுவாங்கண்ணே, அதனால இப்படியே இருக்கணும்ணே..” என சொல்லிகொண்டு இதே உடையில்தான் இருப்பார்.

திருமணத்தன்று மட்டும் மாற்றினார், மறுபடி திரும்பினார்.

அந்த உடையிலே 8 வருடமாக எந்திரன் வசீகரன் ரஜினி போல , அபூர்வ ராகங்கள் ரஜினி போல‌ சுற்றிகொண்டிருந்த நேற்று பி.எச்டி பட்டம் வாங்கி டாக்டராகிவிட்டார்

ஆம் பழனிச்சாமி போல் அல்ல, மாறாக படித்து உழைத்து வாங்கிவிட்டார்

இனி அவர் டாக்டர் Omm Prakash. இதே உடையில்தான் பட்டமும் வாங்கினார்.

இனியாவது அந்த கோட்டை கற்றுவீரா என்றால் “இல்லண்ணே அமெரிக்காவுல அடுத்த ஆராய்ச்சி பண்ணனும், எப்போ வேணும்னாலும் கூப்பிடுவாக.. ரெடியா இருக்கணும்ணே” என்ற பதில் வந்தது

அவரை வாழ்த்துவோம், மனைவி வந்த நேரம் அவருக்கு எல்லாம் கூடி வருகின்றது. அவர் இன்னும் உயர வாழ்த்துக்கள்.