அவர்களாக நினைத்து கொண்டிருக்கின்றார்கள் பரிதாபம்

சென்னை மெட்ரோ ரயில் போன்று உலகெல்லாம் பெருநகரங்களில் தானியங்கி ரயில்கள் உண்டு, கோலாலம்பூரிலும் உண்டு

இன்று அந்த விசித்திரத்தை காணமுடிந்தது, அங்கே ஒரு வங்கதேசத்துகாரன் வைகோ போல அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான், முதல் முறையாக வந்திருப்பான் போலிருக்கின்றது

ஆனால் வைகோ, திருமா, முகஸ்டாலின் போல அல்ல இவன், ஆம் செல்ல வேண்டிய இடம் இவனுக்கு தெளிவாக தெரிந்திருக்கின்றது, வழிகாட்டத்தான் யாருமில்லை

ஒருவழியாக டிக்கெட் எடுத்து கொடுத்து அதை பயன்படுத்தும் முறையினையும் உலகின் ஆதிகால பாஷையான சைகை பாஷையில் சொல்லி ரயில் நிற்கும் இடத்திற்கும் அழைத்து வந்தாயிற்று

அது தானாக நிற்கும் ரயில் என அவனுக்கு தெரியாது, ரயில் வந்தவுடன் கைகாட்டினான், இரு கைகளையும் ஆட்டி நிற்க சொன்னான்

ரயில் நின்றவுடன் அதை தானே நிறுத்தியது போல மகிழ்ந்தான்

உள்ளே சென்றால் அங்கும் இங்கும் தேடினான், பதற்றமாக ஓடிவந்து ஒரு இருக்கையில் அமர்ந்தான், என்னாயிற்று என மெதுவாக கேட்டால், டிரைவர் இல்லை என்றான் அவன் முகத்தில் அவ்வளவு பதைபதைப்பு இருந்தது

அவன் இறங்க வேண்டிய இடத்தில் வண்டி நிற்குமா நிற்காதா? என கேட்டுகொண்டே இருந்தான், நிற்காவிட்டால் எப்படி என அவன் அஞ்சியது இப்பொழுது மோடியினை பார்த்து பழனிச்சாமி அஞ்சுவது போலவே இருந்தது

அவனுக்குரிய நிறுத்தம் வந்ததும் ஸ்டாப் என கத்தினான், அவன் கத்தாவிட்டாலும் வண்டி நிற்கத்தான் போகின்றது என்பது அவனுக்கு தெரியாது

வண்டி நின்றது, அவன் சொல்லித்தான் வண்டி நின்றதாக கர்வபட்டு கொண்டான், ஏதோ பெரும் சாகசம் செய்தது போல அவன் முகத்தில் வெற்றிசிரிப்பு

அந்த ரயில் தானாக நிற்கும் தானாக நகரும் தானாக எல்லா நிறுத்தத்திலும் நிற்கும்

அவனோ அவன் கைகாட்டித்தான் நின்றது, அவன் சொல்லித்தான் ஓடியது, அவன் சொல்லித்தான் மறுபடியும் நின்றது என நினைத்துகொண்டு கர்வத்தோடு சென்றான்

அவனும், இந்த பெரியார் இல்லண்ணா, அண்ணா இல்லண்ணா, கலைஞர் இல்லண்ணா… என்ற கோஷ்டிகளும் ஒரே ரகம்

காலம் அதன் போக்கில் சென்றுகொண்டே இருக்கும், மாறுதல்களுக்கு ஏற்ப உலகம் மாறிகொண்டே இருக்கும்

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த ஓட்டத்தில் நாமும் கலந்தாக வேண்டும், இல்லை காலம் இழுத்து கொண்டு ஓடும் அல்லது விட்டுவிட்டு ஓடும்

ஆனால் இந்த பெரியார் கோஷ்டிகளோ அந்த வங்கதேசத்தான் போல வரலாற்றை பெரியார் நிறுத்தினார், புரட்டினார் ஓடவிட்டார் என அவர்களாக நினைத்து கொண்டிருக்கின்றார்கள் பரிதாபம்