அவர்களுக்கு குரான் உமக்கு பைபிள் அவ்வளவுதான் வித்தியாசம்
ஒரு நண்பர் வந்தார், வந்து நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள் ஆனால் பைபிள் பற்றி மட்டும் உனக்கு அறிவே இல்லை. அதெல்லாம் சத்தியம் அதனை உணர்ந்து உண்மையினை எழுது என சொல்லிவிட்டார்
இதுதான் சிக்கல்
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தில் ஆணித்தரமான நம்பிக்கை உள்ளது, அதனை தகர்க்கும்படி சொன்னால் உடனே ஏய் நீ பொய்யன் என சொல்லிவிட்டு ஓடுகின்றார்கள்
இந்த கிறிஸ்தவ வெறியரும் அப்படித்தான்
எது அய்யா சத்தியம்?
இயேசு யூதமதத்தை சாடினார், அவர் புதுமதம் கிளப்பியவர் அல்ல ஆனால் புது கூட்டத்தை சேர்த்தவர், ஏக இறைவனை எப்படி தொழவேண்டும் என புது வடிவம் கொடுத்தவர்
ஆனால் யூதனாய் இருந்து பின் கிறிஸ்தவன் ஆன பால் என்பவர் அப்படியே யூத கருத்துக்களை விஷமாய் புகுத்தியதன் விளைவே இன்று கிறிஸ்தவம் யூத பாணியில் சிக்கிவிட்டது
உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன், இயேசு பெண்ணடிமைதனத்தை ஒழித்தவர், அவரின் சீடர்களிலே பெண்கள் இருந்தார்கள், அவர் உயிர்தெழுந்தபின் முதலில் கண்டதும் ஒரு பெண்ணே
ஆனால் இன்று பைபிள் குறிப்பாக புதிய ஏற்பாடு சொல்வதென்ன? பெண்களுக்கு வழிபாட்டு உரிமை கொடுக்காதே, அவர்கள் தலையினை மூடியே இருக்கட்டும்
இத்தனை ஆயிரம் சபைகள் உள்ளன, ஒரு சபையில் திருப்பலி நிறைவேற்றவோ அலல்து சர்வீஸ் எனப்படும் ஜெபத்தில் செய்தி வழங்கவோ ஒரு பெண்ணை கிறிஸ்தவம் அனுமதிக்குமா?
ஒருகாலுமில்லை, காரணம் யூத கருத்துக்கள் அபப்டி புகுந்துவிட்டன
இதனை எல்லாம் ஆழ யோசித்தால் விளங்கும், அதனை விட்டுவிட்டு பைபிள் சத்தியம், அதனை எப்படி நீ அரைகுறையாக சொல்லலாம் என்றால் நீவீர் ஐ.எஸ், தாலிபன்கள் அமைப்பின் பிடிவாததத்திற்கு சற்றும் குறைந்தவரல்ல
அவர்களுக்கு குரான் உமக்கு பைபிள் அவ்வளவுதான் வித்தியாசம்