அவர்களுக்கு புதிதா என்ன?

மோடி எதிரி நாட்டு செயற்கை கோளை உடைத்துவிட்டார் என மறுபடியும் கானசபா கோஷ்டிகள் தொடங்கிவிட்டன‌

சும்மா இன்னொரு நாட்டு செயற்கை கோளை மாட்டுகறி வைத்திருந்த இஸ்லாமியனை அடிப்பது போல் எளிதாக அடிக்க முடியாது

பாபர் மசூதி போல சும்மா இடிக்கவும் முடியாது

அதுவும் பாகிஸ்தான் செயற்கைகோள் எல்லாம் விஷயமே அல்ல, அவர்களே சாதாரண செயற்கைகோளுகே தடுமாறுகின்றார்கள்

இந்த சோதனையில் பாகிஸ்தானின் செயற்கைகோள் எதுவும் தொட்டு கூட பார்க்கபடவில்லை

பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் ஏகபட்ட கைவிடபட்ட விணகலன்கள், செயற்கைகோள்கள் உண்டு

ஆம் ஆயுள் முடிந்தவுடன் அவை வெறுமனே சுற்றும், இந்த வைகோ அறிவாலயத்தை சுற்றுவது போல அதுபோக்கில் சுற்றிகொண்டே இருக்கும் ஆனால் செயல்படாது

விண்ணில் பூமி வட்டத்துள் போடபடும் எதுவும் சுற்றிவரும் என்பது விஞ்ஞான விதி

அப்படி வைகோ, திருமா, சைமன் போல கைவிடபட்ட செயற்கைகோள்கள் நிறைய உண்டு

அதை இடித்து தள்ளி தன் செயற்கை கோளை நிறுத்த ரஷ்யா ஸ்பெஷல் இடிவண்டியினையே அங்கு நிறுத்தியிருக்கின்றது என்றால் விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள்

அந்த குப்பைகளில் ஒன்றை ஏன் இந்தியாவால் கைவிடபட்ட ஒன்றை கூட டம்மியாக வைத்து சோதித்திருக்கலாம்

குப்பை தொட்டியினை அடித்தற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்? அட பதர்களா?

மற்றபடி எதிரிநாடுஎன நம்மை கண்காணிப்பது அமெரிக்காவும் சீனாவுமே

பாகிஸ்தான் பரிதாபநாடு இதை எல்லாம் செய்ய அறிவோ தெம்போ இல்லாநாடு

எதிர்நாட்டு செயற்கை கோள் என்றால் சீனாவும் அமெரிக்காவுமே அவர்களை தொட்டு பார்த்தாலே முடிந்தது விஷயம்

ஒருவேளை சீனா கைவிட்ட செயற்கை கோளை உடைத்திருப்பார்களோ?

ஆளில்லா வீட்டில் சவுண்ட் விடுவது அவர்களுக்கு புதிதா என்ன?