அவர்களும் அவர்கள் சுற்றுசூழல் கவலையும்..

அனுதினமும் கடலில் எவ்வளவோ கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் எடுக்கின்றார்கள், வியாபரம், வணிகம் வர்த்தகம் என ஓடும் கப்பல்கள் எப்படி எல்லாமோ கடலை மாசுபடுத்துகின்றன‌

அணுவுலை வெளியேற்றும் மிக கொதிக்கும் கழிவுநீர் கடலில் கொட்டபடுகின்றது

ஏன் ஏராளமான நாடுகள் ரகசிய அணுசோதனை மற்றும் கண்ணிவெடி ஏவுகனை சோதனை என கடலை மாசுபடுத்துகின்றன, அதை விட கொடுமை அணுகழிவுகளை கடலில் வீசுவது

மனிதனின் பிளாஸ்டிக் கழிவுகளின் கூடாரமாக கடல் மாறிகொண்டிருக்கின்றது, நடுகடல் என்பது சர்வதேச குப்பை தொட்டியாகி அது கடற்கரைக்கு அலைகளால் அடித்த்துவரபட்டு எல்லாமே அசுத்தம்

கடல் மட்டம் பனி உருகி உயருமோ இல்லையோ அதில் கொட்டபடும் கழிவுகளால் நிச்சயம் உயரும் என்கின்றது ஆய்வு அவ்வளவு கொட்டுகின்றார்கள்

கண்ட்லா முதல் கல்கத்தா வரை சுத்தமான துறைமுகம் ஒன்றை காட்டுங்கள் பார்க்கலாம், அதற்காக கப்பல் போக்குவரத்தை நிறுத்த தயாரா?

ஏன் கூவம் முதலான ஆறுகள் சுத்தபடுத்தபட்டா கடலுக்கு செல்கின்றது, அதற்கு காரணமான அரசை ஒரு பயல் கேட்பானா?

மாட்டான்.

அவனவன் ஏரி குளங்களை எல்லாம் ஆக்கிரமித்து வீடும் கல்லூரியும் கட்டியிருக்கின்றான் அது தவறே இல்லையாம், ஆனால் அதில் பிள்ளையார் சிலையினை வீசினால் தவறாம்

ஆக எதெல்லாமோ செய்து கடலையும் நீர் நிலையிலையும் நாசமாக்குவார்களாம், அங்கெல்லாம் பகுத்தறிவு இன்னபிற எக்ஸ்ட்ரா அறிவாளிகள் எல்லாம் அமைதி காபபர்களாம்

ஆனால் பிள்ளையார் சிலையினை வீசினால் மட்டும் சுற்றுபுறம் கெட்டுவிடுமாம்

அனுதினமும் கொட்டும் கழிவுகள் கெடுக்காத சுற்று சூழலை ஒரே ஒரு நாள் பிள்ளையார் சிலை கெடுத்துவிடுமாம்

கார் பைக்கின் கழிவு ஆயில் முதல் ஒவ்வொருவரும் அனுதினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் முதல் , தொழிற்ச்சாலை கழிவு வரை ஒவ்வொரு நொடியும் சுற்றுபுறத்தை கொல்கின்றது

அவை கடலுக்கும் நீர் நிலையிலுமே குவிந்து கிடக்கின்றது

அதை எல்லாம் தடுத்துவிட்டு ஒரே ஒரு நாள் மட்டும் கொண்டாடும் பிள்ளையார் ஊர்வலத்துக்கு வந்துவிட்டார்கள் இவர்கள்

தீபாவளிக்கு வெடி வெடிக்க கூடாது, கார்த்திகை மாதம் சொக்கபனை கொளுத்த கூடாது, பிள்ளையார் சிலையினை கரைக்க கூடாது, விழாகாலத்தில் ஸ்பீக்கர் கூடாது

இதெல்லாம் சுற்று சூழலை கெடுக்குமாம்

இதற்கு இந்துக்கள் பண்டிகை கொண்டாடவே கூடாது என நேரடியாக சொன்னால்தான் என்ன?

அவர்களும் அவர்கள் சுற்றுசூழல் கவலையும்..