அவர்களை உற்சாக படுத்தவேண்டும்
5ம் வகுப்பு மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லலாமா?
செல்லலாம்
5ம் வகுப்பு மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்து செல்லலாமா?
செல்லலாம்
5ம் வகுப்பு மாணவர்களை கேத்தலிசம், நல்லொழுக்கம், காலை வழிபாடு என அணிவகுக்க வைத்து பழக்கலாமா
பழக்கலாம்
5ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு அழைத்து செல்லலாமா?
அய்ய்யய்யோ மாணவர் மேல் மனரீதியான வன்முறை நிகழ்த்துகின்றார்கள்…மோடி எடப்பாடி கொடுமை பாரீர்
அன்றே 5ம் வகுப்பு தேர்வு ஒழுங்காக இருந்தால் அண்ணாவும் கருணாநிதியும் இன்னும் பல திராவிட இம்சைகளும் வடிகட்டபட்டிருக்கும் தமிழகம் தப்பித்திருக்கும், இப்பொழுதாவது வந்தது நல்லது
ஐந்தாம் வகுப்பு குழந்தைகளை ஆப்கானிஸ்தானுக்கா தேர்வுக்கு அனுப்ப போகின்றார்கள்? அருகிருக்கும் மையத்துக்குத்தான் அனுப்புவார்கள்
இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்
இதுவே 5ம்வகுப்பு குழந்தைகளுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கபடும் என அறிவிப்பு வரட்டும், பலமணிநேரம் அக்குழந்தைகளை ரேஷன் கடை முன்னால் நிற்க வைக்க தமிழகம் ரெடி
1 வயது குழந்தையினை தூக்கிபோட்டு பழக்குகின்றது சீனா, 2 வயது குழந்தைக்கே தனி தைரியம் வருமளவு வளர்க்கின்றது ஐரோப்பிய சமூகம்
அதனால் அந்த குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து ஒலிம்பிக் முதல் ராணுவம் வரை நாட்டை முன்னுறுத்துகின்றன
இங்கு நிலமை தலைகீழ், தாங்கோ தாங்கு என தாங்கி அவற்றின் தைரியத்தை பாழடிக்கின்றார்கள்
போராடவிடாமல் குழந்தையினை மடிக்குள்ளே வைத்து வளர்த்தால் என்னாகும், முக ஸ்டாலின் போல் ஆகிவிடும்
அது திமுகவினருக்கு சரிவரும், மற்றவர்களுக்கு சரிவராது
பறவை கூட பறக்க சொல்லிகொடுத்துவிட்டு ஒதுங்கிவிடும், தானே உணவு தேட பழகியதும் குட்டியினை பிரியும் விலங்குகள்
குரங்கும் கங்காருமே கொஞ்சகாலம் குட்டியினை சுமக்கும் பின் அவையும் அடித்து விரட்டும்
மானிட இனம் கொஞ்சம் சபிக்கபட்டது என்பதால் கொஞ்சகாலம் குட்டிகளை தன்னோடு வைத்துகொள்ளும், அதில் தமிழ்சமூகம் மகா மகா மோசம்
தைரியமான தலைமுறையினை உருவாக்க 5ம்வகுப்பு தேர்வினை குழந்தைகள் எழுதட்டும், புதிய சூழலில் தன்னம்பிக்கையினை வளர்க்கட்டும்
5ம் வகுப்பு மாணவர்கள் 10 வயதை தாண்டுபவர்கள் அவர்களுக்கு கல்வி உலகின் பல விஷயங்களின் அடிப்படையினை கற்றுகொடுக்க இத்தேர்வும் அதன் சூழலும் அவசியம்..
அவர்களை உற்சாக படுத்தவேண்டுமே தவிர, ஓலமிட்டு பயமுறுத்துதல் கூடாது..