அவர்கள் கொள்கை அப்படி
முதலில் விடுதலை நாளை துக்கநாள் என்றார் பெரியார், இனி வெள்ளையனிடமிருந்து அதிகாரம் பார்ப்பானுக்கு செல்லும் என்றார்
பின்பு காமராஜர் கக்கன் போன்ற பிம்பங்கள் வர வர அவரின் துக்கம் அதிகமாயிற்று அதன் பின் சத்தமில்லை
பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது திராவிட நாடு வேண்டுமென்றார் அவர் கேட்ட திராவிடநாடு ஆந்திரா கன்னடம் கேரளா எல்லாம் சேர்ந்திருந்தது ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை
பாகிஸ்தானை போல் சுதந்திர திராவிடநாடுசாத்தியம் என்றது அக்கோஷ்டி.
அண்ணாவும் சம்பத்தும் கலைஞரும் மதியழகனும் இன்னும் நெடுஞ்செழியனும் திராவிட நாடு அடைந்த்தே தீருவோம் என ஆவர்த்தனம் செய்தார்கள்
அவர்கள் உதாரணமாக காட்டியது எல்லாம் அன்று பிறந்த பாகிஸ்தானை
ஆனால் ஆந்திரமும் கன்னடமும் கேரளமும் இப்படி ஒரு கோஷ்டி இருப்பதாகவே கருதவில்லை, இவர்களாக அவர்களுக்கும் சேர்த்து திராவிட நாடு என சொல்லிகொண்டிருந்தார்கள்
பட்டேல் இரும்பு மனிதராக சமஸ்தானங்களை ஒடுக்கி இந்தியாவோடு இணைக்கும்பொழுது இவர்களுக்கு ஏதோ உரைத்தது
ஆம் இன்று காஷ்மீர் என ஒப்பாரியிடும் இக்கும்பல் ஐதரபாத் சமஸ்தானம் வலுகட்டாயமாக இந்தியாவோடு இணைக்கபட்டபொழுது சிறுத்தையினை கண்ட நாயாக வாலை ஓடுக்கி இருந்தது
காஷ்மீருக்காவது ஒப்பந்தம் உண்டு, ஐதரபாத் கதையே வேறு
இவ்வளவுக்கும் திராவிட திருநாட்டின் பகுதி ஐதரபாத்
தொடர்ந்து கோவா, டாமன், புதுச்சேரி, சந்திரநாகூர் என எல்லாமும் இந்தியாவின் கட்டுபாட்டுக்கு வலுகட்டாயமாக வந்தபொழ்து திராவிடகும்பல் கனத்த அமைதி
பின் சீனப்போரின் பொழுது திராவிட நாட்டை கடாசிவிட்டு இந்திய தேசியத்தில் சரணடைந்தார்கள்
அன்று பாகிஸ்தானுக்காக ஆர்ப்பரித்த கும்பல் இன்று காஷ்மீருக்காக ஒப்பாரி வைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்?
அவர்களுக்கு இந்தியா பலமாவதும் ஒற்றுமையாக ஒரே நாடாக திகழ்வதும் ஒருநாளும் பிடிக்காது, அவர்கள் கொள்கை அப்படி