அவர் செல்லும் இடமெல்லாம் சிறக்கட்டும்
காசிமேடு காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் என்பவர் மிக சிறப்பாக பணியாற்றியிருகின்றார், போதை பொருள் ஒழிப்பு, பாதுகாப்பு இன்னும் பல நற்காரியங்களை செய்ததால் சாமி படத்து விக்ரம் அல்லது சிங்கம் சூர்யா போல அவருக்கு நற்பெயர் இருந்தது
அவரை பணிமாற்றம் செய்திருகின்றார்கள் ஆனால் காசிமேடு பகுதியே திரண்டுவந்து அவர் செல்ல கூடாது என போராடியிருக்கின்றது, குறிப்பாக பெண்கள் அலையாக திரண்டு அழுது ஆர்பரித்து அவரை செல்ல கூடாது என தடுத்திருக்கின்றார்கள்.
அம்மக்களின் உணர்வுகளை எம்மால் புரிந்து கொள்ளமுடிகின்றது. சில கருப்பு ஆடுகளையே கண்ட அம்மக்கள் தங்களை புரிந்து கடமையினை சரிவர செய்த அந்த காவலரில் தெய்வத்தையே கண்டிருக்கின்றார்கள், அவரை கொண்டாடியிருக்கின்றார்கள்
அவரும் காவல் தெய்வமாக இருந்திருக்கின்றார், தெய்வத்தை யார் விடுவர்?
செய்யும் தொழிலே தெய்வம், அந்த கடமைதான் தெய்வீகம் என்பதை காவலர் நிரூபித்திருக்கின்றார்
ஒரு விஷயத்தை இதில் சொல்லலாம் , இதற்கு முன் இருந்த காவலர்கள் செய்யாத எதையோ ஒன்றை அல்லது அவர்கள் செய்ய தவறிய ஒன்றை இவர் மிக சரியாக செய்திருக்கின்றார் என்பது புரிகின்றது
நிச்சயம் இந்த முருகேசன் புதுவழி காட்டியிருக்கின்றார், அவருக்கு அடுத்து வரும் காவலருக்கு சிறப்பாக கடமையாற்ற நெருக்கடி உண்டாகியிருக்கின்றது என்பது காசிமேட்டுக்கு நல்லது
ரவுடிகள் ஏரியா என்றும் ஒரு மாதியான பூமி எனும் சித்தரிக்கபடும் அந்த ஏரியாவின் மக்கள் மனதால் நல்லவர்கள் என்பதும், அயோக்கியர்கள் அவர்களை தவறான வழிக்கு இழுக்கின்றார்கள் ஆனால் நல்லவர்களால் அவர்களை நல்ல வழிக்கு திருப்பமுடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார் முருகேசன்
அப்பெண்களின் அப்பழுக்கற்ற கண்ணீர் அதைத்தான் காட்டுகின்றது
கவனியுங்கள், இப்படி ஒரு அரசியல்வாதியினை மக்கள் அடுத்தாலும் நீயே வேண்டும் என கதறி தடுத்திருக்கின்றார்களா?
எங்காவது ஒரு எம்பி எம்.எல்.ஏவிடம் இப்படி அழுது எம்மை விட்டு செல்லாதே என சொல்லியிருகின்றார்களா?
இல்லை
கடமையினை மிக சரியாக செய்து வழிகாட்டியிருக்கின்றார் முருகேசன், அவர் செல்லும் இடமெல்லாம் சிறக்கட்டும்
