அவ்வளவு ஏமார்ந்துவிட்டது இத்தேசங்கள்

இலங்கையில் சிங்கள அரசால் ஈழதமிழனுக்கு என்ன அநீதி விதைக்கபட்டதோ அதுதான் இந்தியாவில் பிராமணனுக்கும் இழைக்கபட்டது

ஒவ்வொரு நாட்டினையும் ஆண்ட வெள்ளையன் அந்நாடு யாரால் வளமாயிருக்கின்றது என்பதை துல்லியமாக கண்டறிந்து அந்த இனத்துக்கு எதிரான கடும் எதிர்ப்பு விதையினை தூவிவிட்டே சென்றான், அப்பொழுதுதான் அவன் வெளியேறினாலும் அத்தேசம் தனக்குள் சண்டையிட்டு செத்து உருப்படாமல் போகும் அதில் தனக்கு ஏக லாபம் என கருதினான்

பர்மாவில் தமிழக செட்டியார்கள் அதை பொன்விழையும் பூமியாய் வைத்திருந்தனர், தமிழக செட்டியாருக்கு எதிரான கருத்தை விதைத்தான், அது அட்டகாசமாக வேலை செய்து செட்டிகள் விரட்டபட்டு பர்மா தரித்திர தேசமானது

இதையே இலங்கையில் அதை ஆண்டுகொண்டிருந்த ஈழ தமிழருக்கு சிங்களன் மூலம் செய்தான்

இந்தியாவில் பிராமணருக்கு எதிராக சில அடிப்பொடிகள் மூலம் செய்தான் அம்பேத்கர், பெரியார் நீதிகட்சி எல்லாம் அவ்வகையறா

செட்டிகள் இல்லா பர்மா, ஈழதமிழன் இல்லா கொழும்பு, பிராமணன் இல்லா இந்தியா என மூன்றும் தரித்திர கோலம் பூண்டு இன்னும் எழமுடியாமல் தவிக்கின்றது

இதற்கு மேலும் அவன் கணக்கு இருந்தது இந்தியாவில் வங்கமும் பஞ்சாபும் மிக வளமான பகுதிகளாகவும் உணர்ச்சிபூர்வமான மக்களின் பூமியாய் இருந்தது பிரிவினையின் பொழுது அந்த இனங்கள் வெட்டிகொண்டு சாக வழிசெய்தான்

அவனின் திட்டபடி வளமான பஞ்சாபும் வங்கமும் துண்டாடபட்டன, சிந்து விழுங்கபட்டது. பஞ்சாப் வங்கத்தின் வலி இன்றளவும் நீடிக்கின்றது

இந்த பிரிவினையில் சிங்கப்பூர் மட்டும் தப்பியது, அதற்கு காரணம் மலேய மக்களின் பெருந்தன்மையும் அவர்கள் இயல்பான நாகரீகமுமே. இன்றளவும் இரு நாடுகளும் வாழ்கின்றன‌

இலங்கை இட ஒதுக்கீடு என ஈழதமிழரை அடிமைபடுத்தியது, இந்தியாவிலும் அதுவே பிராமணருக்கு எதிராக‌ நடந்தது

ஆனால் ஈழதமிழர் துப்பாக்கி தூக்கினர் அவர்களை கொண்டே அந்த தேசத்தை எரியவைத்து நாசமாக்கி கையில் வைத்தான் வெள்ளையன்

இந்த வெறுப்பில்தான் ராஜபக்சே சீன பக்கம் சென்றார், காரணம் புலிகளை வளர்த்ததில் மேற்கு நாடுகள் பங்கு உண்டு, ஆரம்ப காலத்தில் இந்தியா பங்கும் உண்டு

இலங்கை இந்த இடஒதுக்கீட்டால் உள்நாட்டு போரை சந்தித்து நாசமாயிற்று

அருமை இந்தியாவிலோ பிராமண இனம் துப்பாக்கி தூக்கவில்லை மாறாக அந்த சவாலையும் கடந்தது, நமக்கு தேவை ஒரு வேலை அவ்வளவுதான் அது அரசு கொடுத்தால் என்ன? தனியார் கொடுத்தால் என்ன? என அதன் போக்கில் முன்னேறியது

இன்று அமெரிக்கா முதலான நாடுகள் பிரிட்டன் முதலான நாடுகளின் கம்பெனிகளின் பிராமண சமூகம் அதிகம்

அப்படியே ஈழதமிழரும் அதிகம்

இதில் வெள்ளையன் எவ்வளவு தந்திரமாக ஆடுகின்றான் என்றால் அவனின் நுட்பம் எப்படி துல்லியமானது என்றால் இப்படித்தான்

தான் ஆளும் நாட்டை கவனமாக படித்த வெள்ளையன் அங்கிருந்த செல்வங்களையும் இன்னும் பலவற்றையும் சுரண்டினான், அதே நேரம் அங்கிருந்த அறிவார்ந்த இனமும் அவனை கவர்ந்தது

அவர்களை கொண்டு செல்ல எண்ணினான், அவர்கள் நிச்சயம் நாட்டை விட்டு வரமாட்டார்கள் என்பதும் தங்களுக்கு பின்னால் இந்நாட்டை செழிக்க செய்வார்கள் என்பதும் அவன் கணக்கு

அது பிராமணனோ இல்லை ஈழ தமிழனோ அந்த அதிசயத்தை நிகழ்த்துவான் என்பதை கண்கூடாக கண்டவன் அவன்

அவர்கள் தானாக வரமாட்டார்கள், ஆனால் வரவேண்டிய நிர்பந்தம் வந்தால் இனி இந்நாட்டில் வாய்ப்பில்லை என்ற நிலை வந்தால் தன் நாடுநோக்கி ஓடிவருவர் என்பது அவனுக்கு தெரியும்

அதற்கான சூழலை அவனே தன் அடிபொடிகள் மூலம் உருவாக்கினான்

பிராமணரும் ஈழதமிழரும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குவிந்தனர், அவனுக்காய் உழைக்கின்றனர் அத்தேசங்கள் வளமையும் அமைதியுமாய் இருக்கின்றன‌

ஆனால் இந்தியாவும் இலங்கையும் எப்படி நாசமாகி இன்னும் நாசமாகிகொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியாததல்ல‌

ஆம் யார் இருந்தால் இத்தேசம் நன்றாய் இருக்குமோ அவர்களை அகற்றிவிட்டு யாருக்க்கு ஆட்சியும் நிர்வாகமும் வராதோ அவர்களை அட்டகாசமாக ஆட்சி செய்யவைத்துவிட்டு பார்த்துகொண்டிருக்கின்றான் வெள்ளையன்

ஆம் திறமையானவர்களை அவனே எடுத்துகொண்டான் அதற்கு அவர்கள் தங்களை நோக்கிவரும் தேவையினை அவனே ஏற்படுத்தினான்

ஒரே கல்லில் இருமாங்காய் என்பது போல அறிவார்ந்த இனங்களை தன் நாட்டுக்கு எடுத்தும் ஆயிற்று, தன் காலணி நாட்டை உருப்படாமல் செய்தலும் ஆயிற்று

அவனின் தந்திரம் வென்ற இடங்களே தமிழ்நாட்டு திராவிட புரட்சியும், அம்பேத்கரின் இட ஒதுக்கீடும், ஈழபோராட்டமும்

காலிஸ்தான் கலவரத்தில் பஞ்சாபும் கனடாவிலும் அமெரிக்காவிலும் அடைக்கலமானது

இது இந்தியாவுக்கு இழப்பே

கவனித்து பாருங்கள் இதனால் தமிழகமும் ஈழமும் அழிந்தது, இந்தியா பின் தங்கியது, இதனால் தமிழ்நாட்டில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் பிராமணரும் யாழ்பாண தமிழரும் மேற்குலகம் சென்று அவர்களுக்காக உழைக்கின்றனர்

ஆம் இந்நாட்டை வளர்க்கவேண்டிய பிராமணனும் இலங்கையினை வளர்க்க வேண்டிய ஈழதமிழனும் வெள்ளையனுக்கு அடிமையாய் இருந்து அவன் நாட்டை வளர்க்கின்றான்

அவர்களுக்கு ஆசையா? இல்லை தலைவிதி, சொந்தநாட்டில் வாழவிடாத விதியும் ஆபத்தும் வெள்ளையனால் பின்னபட்டிருக்கின்றன, அவர்கள் அடிமையாய் அங்கு இருந்தே தீரவேண்டிய அவசியம் உருவாக்கபட்டிருக்கின்றது

வெள்ளையன் கணக்கு எவ்வளவு துல்லியமாக வேலை செய்கின்றது பார்த்தீர்களா?

உணர்ச்சி அரசியல் வெறுப்பு அரசியல் இப்படித்தான் அவனாலும் அவனின் அடிப்பொடிகளாலும் மேற்கொள்ளபட்டு நாட்டை நாசமாக்கும்

இப்படி மேற்கத்திய வெள்ளையனுக்கு நன்மை செய்ய‌ பிறந்தவர்கள்தான் பெரியார், அம்பேத்கர், நீதிகட்சி இம்சைகள் அவர்கள் வரிசையில் ஜெயவர்த்தனே மற்றும் பிரபாகரன்

இங்கு குழப்பம் கூட கூட அவனுக்கு லாபமே, அதனால்தான் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலையான ஆட்சி அமையும்பொழுதெல்லாம் பிரிவினைகள், சமூக நீதி அழிச்சாட்டியங்கள், பிரிவினை கோஷ்டிகளின் இம்சைகள் எல்லாம் அதிகம் கேட்கும்

இப்பொழுதும் கேட்கின்றது அல்லவா? சூட்சுமம் இதுதான். இங்கு குழப்பம் நீடித்தால் மட்டுமே அறிவார்ந்த இனம் மேல்நாட்டில் வாழும் இல்லையேல் திரும்பும்

இதெல்லாம் புரிந்துகொள்ள மிக சிரமமான கணக்குகள், ஆனால் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் புரியும், ஆனால் அந்த அதிர்ச்சியும் அது கொடுக்கும் வலியும் கொஞ்சமல்ல‌

ஆம் அவ்வளவு ஏமார்ந்துவிட்டது இத்தேசங்கள், இனி இதை எல்லாம் உணர்ந்து திருந்த சில நூற்றாண்டுகள் கூட ஆகலாம்