அவ்வளவு நல்லவர்கள் நீங்கள்

போங்கடா டேய்

அந்த வைகோவினையே சேர்த்து கொண்டீர்கள், கலைஞர் மேல் சீறிபாய்ந்த பாய்ந்த அந்த கலைராஜனையும் நேற்று சேர்த்து கொண்டீர்கள்

உங்களை மிக மிக கொச்சைபடுத்துபவர்களை எல்லாம் தேர்தல் உடனே அணைத்து கொள்கின்றீர்கள்.

யாரெல்லாம் கடந்த காலங்களில் உங்களுக்கு குழிபறித்தார்களோ அவர்களை எல்லாம் தயக்கின்றி இப்பொழுது மேலே ஏற்றிவிட அரும்பாடுபடுகின்றீர்கள்

எவ்வளவு நல்லவர்கள் நீங்கள்?

எப்படி எல்லாம் இந்த நபர் நம்மை அவமானபடுத்தினார், தோற்கடித்தார் இம்சைபடுத்தினார் என்றெல்லாம் கொஞ்சமும் உங்களுக்கு கவலையே இல்லை

உங்கள் மறதியும் பெருந்தன்மையும் அப்படி

நானும் ஒரு நாள் வந்தால் கண்டிப்பாக சேர்ப்பீர்கள்

வைகோவிற்கே தேர்தல் வேலை செய்யும் நீங்கள், என்னை விரட்டவா போகின்றீர்கள்? இல்லை விரட்டத்தான் முடியுமா?

உங்களை எல்லாம் நம்பி திட்டலாம் பகைக்கலாம்

அவ்வளவு நல்லவர்கள் நீங்கள்.