ஆக சிறைக்கு சென்றுவிட்டனர் சோனியாவும் மன்மோகனும்
சிறையில் இருக்கும் சிதம்பரத்தை சோனியாவும் மன்மோகன்சிங்கும் சந்தித்தனர்
ஆக சிறைக்கு சென்றுவிட்டனர் சோனியாவும் மன்மோகனும்
அன்றொருநாள் கனிமொழியினையும், ஆ.ராசா என்பவரையும் சந்திக்காத காங்கிரஸ் மேலிடம் இன்று அதே சிறைவாசலை மிதித்ததை ஆனந்த களிப்போடு பார்த்து கொண்டிருக்கின்றன திமுக கோஷ்டிகள்
விரைவில் அவர்கள் பகுத்தறிவினை மறந்து “கடவுள் இருக்காரு” என ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள் பாருங்கள்
இதை எல்லாம் பார்த்து ஒரே ஒரு முகம் கண்ணீர் விடும், அது சசிகலா முகம்
ஆம் அவரை சந்திக்க பெரும் பிம்பம் என யாருமே செல்லவில்லை என்பதுதான் அமமுக சோகம்..