ஆசிரியர் தினத்தில் வணங்கிகொள்ளலாம்
சிக்கல் மிகுந்த வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி கடக்கவேண்டும் என சொல்லிகொடுத்த ஆசிரியர் அவர்தான்
அவமானம், துரோகம், பிரிவு, வலி, தாழமுடியா சோகம் , இனி எழவே முடியாதபடி அடி என எல்லாவற்றையும் தாண்டி வரும் தன்னம்பிக்கை அவரின் வாழ்வினை படித்தால் யானை பலத்தோடு வந்து அமரும்
சாதி பலமோ, உடன்பிறப்போ, தந்தையோ , பெரும் கல்வியோ, பணமோ எதுவுமே இல்லாமல் போராட்ட வாழ்வு ஒன்றாலே தன்னை நிரூபித்த மனிதன்
எவ்வளவு எதிர்ப்பு? எவ்வளவு ஏளனம்? எவ்வளவு சதி? அனைத்தையும் தாண்டி தனிமனிதனாய் களத்தில் நின்றது சாதாரணம் அல்ல
இனி அப்படி ஒரு சுவாரஸ்ய மனிதன் வரவே மாட்டான்
நிச்சயம் நெருப்பை பலமுறை தாண்டிய மனிதன்
அவர் மாபெரும் தத்துவாசிரியன், அவர் வாழ்வு சொல்லிவிட்டு சென்ற பாடம் ஏராளம்
எதிர்முகாம் ஆயினும் பீஷ்மருக்கான மரியாதையே தனி
ஆம், அந்த மனிதனே பெரும் ஆசிரியன் அரசியல் உட்பட
அரசியலை விடுங்கள், அதை தாண்டி அவரிடம் கற்றுகொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கின்றது
அவர் இல்லாவிட்டாலும் அந்த சமாதி நோக்கி ஆசிரியர் தினத்தில் வணங்கிகொள்ளலாம்
