ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட வோட்டு

Image may contain: 2 people, people smiling, people standing

சும்மாவே ஆடு சாமிக்கு, கிடா வெட்டி சாராயம் ஊற்றினால் எப்படி ஆடும், பெரும் ரணகளம் செய்யாதா?

ஜெயாடிவி அதனைத்தான் செய்கின்றது. ஏதோ மாபெரும் அணுகுண்டு சோதனையினை செய்த விஞ்ஞானிகள் போல பெரும் ஆரவாரம்

ஏதோ மிகபெரும் ராக்கெட்டை மிக சரியாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளை போலவும், மானிடனுக்கு செயற்கை உயிர் கண்டுபிடித்ததை போலவும் கடும் கொண்டாட்டம்

அவர்கள் நேரம் அப்படி. ஆடத்தான் செய்வார்கள் ஆடட்டும் என சொல்லிவிட்டு அடுத்தசேனலுக்கு சென்றால் சந்திரபாபு அட்டகாசமான சிட்டிவேஷன் சாங் பாடிகொண்டிருந்தார்

“காசை எடுத்து வீசு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்கும் கூட வோட்டு

சிரிப்பு வருது சிரிப்பு வருது 
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..”