ஆச்சரியபட என்ன இருக்கின்றது?

திப்பு சுல்தானின் புகழை ஒழித்துகட்ட இந்த கோஷ்டி கிளம்பியிருப்பது சரியல்ல, அது கண்டிக்கதக்கது

வீர சிவாஜிபோலவே மாவீரன் திப்பு

திப்புவின் திறமையும் அவனின் ஆற்றலும் போரும் மத சகிப்புதன்மையும் அளப்பறியது

அவனின் மைசூர் சமஸ்தானம் அன்று இன்றைக்கு ஜெர்மனிக்கு நிகரான பொருளாதர பலம் கொண்டிருந்தது

முதன் முதலில் ஏவுகனை தயாரித்தது அவனே, அது இன்றும் அமெரிக்காவில் உண்டு

நெப்போலியன் மதித்து போற்றிய மாவீரன் திப்புசுல்தான், உலகில் எந்த வீரனுக்கும் அந்த பெருமை இல்லை

மத சகிப்புதன்மைக்கும் திப்பு எடுத்துகாட்டு, அந்த திருரங்கபட்டினம் ஆலயத்துக்கும் , ஆதீனங்களுக்கும் அவன் அள்ளி கொடுத்தது ஏராளம்

திப்புவின் மீது சில சர்ச்சைகளை சொல்வார்கள், அதாவது தஞ்சாவூர் பக்கம் மடைகளை உடைத்தான், கொடூரன் என ஏராளம் உண்டு, அந்த கதை வித்தியாசமானது

அதாவது அன்றைய தஞ்சாவூர் அரசர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது, ஆடிமாதம் காவேரி பொங்கிவந்து டெல்டா பயிர்களை அழித்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும், இந்த கொடுமையினை வெள்ளையர் தூண்டிவிட்டனர்

பெரும் நஷ்ட ஈடுகேட்டு மைசூர் திப்புவினை படாத பாடுபடுத்தியதால் திப்புவின் படைகள் சில இடங்களில் கோபம் காட்டியதே தவிர, மதவெறியில் அல்ல‌

அப்படி காவேரி நீருக்கு நஷ்டம் கேட்ட கதை தொடர்ந்துதான் விஸ்வேரய்யா கிருஷ்ண்டராஜ சாகர் அணையினையே கட்டினார், அன்று நஷ்ட ஈடு கேட்டுவிட்டு காவேரி காய்ந்துவிட்டது என நாமே அழுகின்றோம்.

சிவாஜி, சந்திரசேகர ஆசாத், மங்கள் பாண்டே, சாவர்க்கர் என பழம் போராளிகளில் இந்துக்கள் என்றால் புகழ்வதும்
திப்பு என்றா எரிவதும் சரியல்ல‌

சுதந்திர போராட்ட வீரர்களை மத அடிப்படையில் புறக்கணிப்பதினை எப்படி ஏற்க முடியும்?

திப்பு இந்த தேசத்தின் மாபெரும் அடையாளம், அவனின் புகழுக்கு எடியூரப்பா இடையூறு செய்தால் அந்த பாவத்தை அவர்களே சுமக்கட்டும்

திப்பு இந்தியாவின் உப்பு

கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.

இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.

சுருக்கமாக சொல்வதென்றால் திப்பு வீழ்ந்தபின் வெள்ளையன் வாய்விட்டு சொன்னான்” இனிமேல்தான் இந்தியா நமக்கானது”

ஆனால் இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.

அந்த சிரிரங்கபட்டிண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்று பெரும் கலவரங்களில் வந்து நிற்கவும் காரணம்

திப்புவின் வரலாற்றை படிக்காமல் அவனை நேசிக்காமல் இங்கு அமைதி வராது

இந்தியாவில் அமைதி வந்துவிட கூடாது என்பதுதானே அந்த கும்பல்களின் நோக்கம், எடியூரப்பா அதைத்தானே செய்வார்

அதில் ஆச்சரியபட என்ன இருக்கின்றது?