ஆச்சரியமாக சற்றும் எதிர்பாரா விதமாக துக்ளக் அதை பிடித்து அச்சில் ஏற்றியிருகின்றது, நன்றி
கக்கனை பற்றி சுமார் 5 ஆண்டுக்கு மேலாக எழுதியிருப்போம் கண்டுகொள்வார் யாருமில்லை
ஆச்சரியமாக சற்றும் எதிர்பாரா விதமாக துக்ளக் அதை பிடித்து அச்சில் ஏற்றியிருகின்றது, நன்றி
நமக்கு தேசபற்றையும் இன்னும் பல நல்ல விஷயங்களையும் நியாயமாகவும் மகா துணிச்சலாகவும் போதித்த பத்திரிகை அது, அதன் உண்மையும் நம்பகதன்மையும் துளியும் சந்தேகத்துக்கு இடமில்லாதது
எந்த பத்திரிகையினை மிக சிலாகித்தோமோ, எந்த பத்திரிகையோடு வளர்ந்தோமோ அதே பத்திரிகையில் நம் பெயரும் வந்தது வாழ்வின் நெகிழ்ச்சியான தருணத்தில் ஒன்று
நாம் வெட்டியாக கோலமிடவில்லை, நாம் தனியே இடும் கோலங்களையும் சிலர் கவனிக்கின்றார்கள் என்பதுதான் மிகபெரும் ஆறுதல்
இந்த பறவையின் குரலையும் கவனித்து பதிவு செய்த அந்த குழுமத்துக்கு நன்றி
பிற்படுத்தபட்டவரும் அப்பழுக்கற்ற தேசியவாதியுமான அப்பெருமகனுக்கு அவர்கள் பத்திரிகைதான் இடம் கொடுத்திருக்கின்றது

