ஆச்சரியமும் அதிசயமும் நடக்கும் காலமிது

ராமர் படத்தை செருப்பால் அடித்த கோஷ்டி, ராமர் படம் எரித்த கோஷ்டி

ராமரை பற்றி கட்டுகதை எழுதிய கோஷ்டி, ராமன் எந்த காலேஜில் படித்தான் என கேட்ட் கோஷ்டி என ஒருபயலையும் காணவில்லை

ராமன் ஆரியன், பேராசைபட்டவன் தன் அரசை விஸ்ரிக்கவே வந்தவன், பரதன் அண்ணன் சொத்துக்கு ஆசைபட்டவன், லட்சுமணனுக்கு உள்நோக்கம் உண்டு என தினிசு தினிச்சாக ராமாயண உரை எழுதிய கோஷ்டியினை காணவில்லை

இருக்கின்றார்களா இல்லையா என்பதே தெரியவில்லை

90 ஆண்டுகால தமிழகத்திற்கு இது புதிது, நிச்சயம் ஆச்சரியம்

அந்த மாபெரும் ஆச்சரியம் நடந்திருக்கின்றது என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

ஒருகுரல் எதிர்த்துவரட்டும் பார்க்கலாம், இது உச்சி குடுமி மன்ற தீர்ப்பு இதை ஏற்க மாட்டோம் ராமன் இந்த மண்ணில் பிறந்தான் என‌ பெர்த் சர்ட்டிபிக்கேட் எங்கே இருக்கின்றது என ஒரு குரல் வரட்டும்?

நாத்திகம் செத்துகொண்டிருகின்றது, அதன் சவபெட்டியில் கடைசி ஆணி அடிக்கபட்டுவிட்டது

தர்மமும் வேதமும் இங்கு மேலெழும் காலம் வந்துவிட்டது, இந்த அமைதிக்கு பின் அந்த பொற்காலம் மேலெழும்

ஆனானபட்ட ராமர்கோவில் சர்ச்சையே தீர்ந்துவிட்ட நிலையில் அடுத்த போராட்டம் இந்து கோவில்களை அறநிலையதுறையின் அழிச்சாட்டியத்தில் இருந்து விடுவிக்கும் போராட்டமாக அமையட்டும்

அந்த பூமி மீட்கபட்டது போல, அறநிலையதுறையிடம் இருந்து ஆலயங்கள் மீட்டெடுக்கபடட்டும்

அது நிச்சயம் நடந்தே தீரும், ஆச்சரியமும் அதிசயமும் நடக்கும் காலமிது, எதுவும் சிரமமில்லை