ஆச்சார கோவை : 11

“உடுத்து அலால் நீர் ஆடார் ஒன்று உடுத்து உண்ணார்
உடுத்த ஆடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார் – என்பதே
முந்தையோர் கண்ட முறை”

சிறப்பான பெருமையும் அறிவும் உடையவர்கள் ஒரு ஆடை உடுத்தாமல் நீராட மாட்டார், இரு ஆடை அணியாமல் உண்ணமாட்டார், ஆடைகளை நீரில் பிழியாமல் இருக்கமாட்டார், பெரும் அவையில் ஒற்றை ஆடையுடன் செல்லமாட்டார் என்பது முன்னோர்கள் கண்ட முறை என்கின்றார் ஞானியார்

இடுப்பில் ஒரு ஆடை அணியாமல் குளிக்க கூடாது, இடுப்பிலும் மேலும் ஆடை (ஈராடை) அணியாமல் உண்ண கூடாது, ஆடைகளை துவைக்காமல் இருக்க கூடாது, அவைகளிலும் பொது இடத்திலும் ஒரு ஆடையுடன் செல்லாமல் நல்ல முழு ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்பது முன்னோர் கண்ட ஆச்சாரம்