ஆடிய ஆட்டம் என்ன ….
சங்கத்திற்கு பெரும் கோபமூட்டும் விஷயத்தை சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அதாவது எங்கள் தங்க தலைவி எங்கோ ஒரு பார்ட்டியில் நடனமாடினாராம், அது வீடியோவாக வந்துவிட்டதாம்.
உடனே பார் உன் தலைவியின் ஆட்டத்தை என வீடியோ அனுப்பிவிட்டார்களாம், அவர்களுக்கு அதிலொரு சந்தோஷம்.
அட பதர்களா? எம் தலைவி ஆடாத நடனமா? எவ்வளவு அழகான நடனங்களை எல்லாம் கொடுத்தவர் இதிலென்ன அதிசயம் கண்டீர்கள்?
இன்றுவரை அவரின் நடனகாட்சிகள் வராத டிவி உண்டா? இன்னொருவர் அப்படி ஆடியது உண்டா?
பத்மா சுப்பிரமணியத்தின் நடனம் எவ்வளவு தெய்வீகமானதோ அதற்கு சற்றும் குறையாதது தலைவியின் நடனம், சினிமாவிற்காக சில விஷயம் மாறி இருக்கலாம் அவ்வளவுதான்
அரசியல்வாதி ஆனபின் ஆட கூடாதா?
மோடி உலகெல்லாம் சென்று டிரம்ஸ் வாசிக்கலாம், வடகிழக்கு இந்தியா சென்றால் அவர் மலைவாழ் மக்களோடு ஆடலாம்
முன்பு ஜெயலலிதா கொடநாடு செல்லும்பொழுது படுகர் இன மக்களோடு கவுண்டமணி தீகுளிக்க செல்லும் அந்த மியூசிக்கில் ஆடவில்லையா?
முக ஸ்டாலின் கூட எங்கோ துள்ளி குதித்ததாக செய்திகள் வந்தன
அதனை எல்லாம் விட்டுவிடுவார்களாம், தலைவி குஷ்பு உற்சாகமாக ஆடினால் இவர்கள் கலாய்க்க வருகின்றார்களாம்
இப்படி எல்லாம் தலைவி பற்றி, அவர் நடனம் பற்றி செய்தியாக்கினால் சங்கம் தக்க பதிலடி கொடுக்கும்
ஆக ஜெயா ஆடினார், மோடி பாடினார். இதனை எல்லாம் விட்டுவிட்டு தலைவி ஆடினால் மட்டும் வந்து நிற்பார்களாம்.
நாமும் அந்த நடனத்தை கண்டோம், அட அட என்ன ஒரு நடனம், நளினம், நர்த்தனம்.
பத்மினியால் கூட அப்படி ஆட முடியாது
இந்த பொறாமை தீயில் எரியும் பதர்கள் தலைவியினை ஏதோ சொல்லி கொண்டிருக்கின்றன, பொறாமை பிடித்த உலகம் இப்படித்தான் இருக்கும் போல
மயில் என்றால் ஆடத்தான் செய்யும், இதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது?
