ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும் : ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தால் திமுகவுக்கு ஒரு நிமிடம் போதும் : ஸ்டாலின்

பின்னர் ஏன் கலைக்கவில்லை, அன்னார் கடிகாரத்தில் 1 நிமிடம் என்பது சர்வதேச கடிகாரத்தில் 4 வருடமா?

இவர் கொல்லைபுறம் வழியாக ஆட்சிக்கு வரமாட்டாராம், தேர்தலில் வென்றபின் ஆளுநர் வீட்டுக்கு வந்து கையினை பிடித்து இழுத்தபின் நேர் வழியில் வருவாராம்

நேர்வழியில் வெல்ல தேர்தல் வேண்டும், தேர்தல் நடக்க ஆட்சி கலையவேண்டும் என சொல்ல கூட இவர் அருகில் யாரும் இல்லையா?

எப்படியோ இவரால் கலைக்க கூடிய அரசை இவர் கலைக்காமல் அவர்களுக்கு உதவி செய்கின்றார் என்பதை ஒப்புகொண்டுவிட்டார், ஆக தற்போதைய தமிழக சீரழிவு இவர் அனுமதியோடு நடக்கின்றது என்பதுதான் தமிழகம் உணரும் விஷயம்