ஆட்சி மாறிட்டா?

“பங்கு டெல்லியில ஆட்சி மாறிட்டா, அது திமுக ஆதரவு அரசாக வந்துட்டா நம்ம அரசை கலைச்சிருவாங்க..

ஒருவேளை பாஜக வந்துட்டா..

அப்பவும் 18 தொகுதி இடைத்தேர்தல்ல நாம தோத்துட்டா நிலமை இன்னும் மோசம்

ஆக எப்படியும் தலைக்கு மேல கத்தி உறுதியாயிட்டு

ஆமா பங்கு, எல்லாத்துக்கும் ரெடியா இருப்போம். அடுத்த ஆட்சியில அவங்க நம்ம மேல சொத்துகுவிப்பு வழக்கு தொடுக்காம இருக்கணும், அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்வோம்

சரி பங்கு, ஆட்சி இழந்துட்டா நாம எங்க போவோம்?

பங்கு நாம எங்க போவோம்? நமக்கு யாரை தெரியும்? அதனால ஆட்சி போனவுடன் நேரே சின்னமாகிட்ட போறோம், அழுறோம் , எல்லோரும் ஒண்ணா ஆகுறோம்

அப்புறம்..

அப்புறம் என்ன? திருக்குவளை தீயசக்தியின் வாரிசு ஸ்டாலினிடமிருந்து தமிழகத்தை விடுவிக்கும் போராட்டத்தை தொடங்க வேண்டியதுதான்

ஒஹோ..

பின்ன சின்னம்மா, அம்மா சமாதியில அடிச்சி செஞ்ச சத்தியத்தை அவங்க காப்பத்தணும்ல, அதுக்கு நாமெல்லாம் துணை இருக்கணும்”