ஆட்டம் கடும் ஜோராக செல்லும் என தோன்றுகின்றது
கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் போல வைகோவும் காங்கிரஸின் அழகிரியும் மோதிகொண்டிருகின்றார்கள்
இன்றைய ஆட்டம் இன்னும் சில நொடிகளில் தொடங்கும் என கேலரியில் இருந்து எதிர்பார்க்கின்றோம்..
இன்னும் ராஜிவ் கொலையில் சிக்கிய வைகோ என காங்கிரஸ் வாய் திறக்காததை வன்மையாக கண்டிக்கின்றோம்
அப்படியே கனிமொழியினை ராசாவினை திகாரில் அடைத்த கட்சி என பொங்காத வைகோ என்பவரையும் வன்மையாக கண்டிக்கின்றோம்
இந்திராவினை அடித்த கட்சி திமுக என இவர்கள் சொல்ல
அந்த இந்திராவே எங்கள் கூட்டணிக்கு வந்தார் என அவர் சொல்ல..
ஜெயின் கமிஷனில் சிக்கி வாஜ்பாய் பக்கம் போனவர்கள் நீங்கள் என இவர்கள் சொல்ல..
வேறு என்ன மண்ணாங்கட்டிக்கு சோனியா பாதர் பாதர்னு எங்கள் தலைவரை தேடினார் என அவர்கள் சொல்ல
ஆட்டம் கடும் ஜோராக செல்லும் என தோன்றுகின்றது..