ஆண்டவன் பிரம்படியில் சத்தம் கேட்காது
ஆண்டவன் முன் மாபெரும் ஞானியும், ஓளி பொருந்திய நல்லவனும், கொடும் பாவியும் ஒன்றே
ஆலயத்தில் நுழைய நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் தகுதி அல்ல, தெய்வத்தை தேடி யார் வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் அந்த தெய்வத்தின் கருணை கிடைக்கின்றதா என்பதுதான் முக்கியம்.
வால்மிகி ஒரு காலத்தில் கொடிய வேடனாய் இருந்திருக்கின்றான், பாவியான துரியோதனுடன் பழக மிக தூயவனான கண்ணனுக்கு தயக்கமே இல்லை
இயேசுநாதர் தன் வாழ்நாளெல்லாம் முரடர்கள், பாவிகள் என்பவர்களோடேத்தான் பழகியிருக்கின்றார், ஏன் சாகும் பொழுதும் பரபாஸ் எனும் கொலைகாரனுக்கு பதிலாகவே செத்திருக்கின்றார்
மதங்கள் எல்லாம் பாவிகளை திருத்த வழி சொல்பவை தவிர, எந்த கொடும் பாவியினையும் விலக்கி வைப்பதல்ல
குற்றம் புரிந்தவனை விலக்கி வைத்தால் அது நல்ல மதமாக இருக்கவே முடியாது
மனிதனின் சட்டதிட்டமும் நியாய தர்ம தண்டனையும் வேறு அது சமூகத்திற்கானது
ஆண்டவனின் சட்டதிட்டமும் அவனின் தீர்ப்பும் வேறு அது மானிட கண்களால் பார்க்க முடியாதது, சம்பந்தபட்டவன் மனதால் உணரும் விஷயம் அது
ஆண்டவன் பிரம்படியில் சத்தம் கேட்காது என்பார்கள்
வரிச்சியூர் செல்வம் எனும் பிரபல ரவுடி அத்திவரதரை பூஜிக்க வந்ததிலும் அவனை அனுமதித்ததிலும் தவறேதுமில்லை
ஒருவேளை அவனை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தால் அதுதான் தவறு..