ஆண்டாள்.. மஸ்கோத்து… டிரம்ப்….
திரையுலகை “ஆண்டாள்”,
சங்கத்தார் மனதினையும் “ஆண்டாள்”.
எமக்கு தெரிந்தது இந்த “ஆண்டாள்” ஒருவர்தான்.
ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போன்றது முக ஸ்டாலின். ஆளுநர் உரை பீமபுஷ்டி அல்வா போன்றது அதிமுக தரப்பு
ஆக சட்டசபை பேக்கரி லெவலுக்கு சென்றாயிற்று , இனி வடிவேலுவின் “வீரபாகு பேக்கரி” போல கதைகள் வந்தாலும் ஆச்சரியமில்லை.
இந்தியா, ரஷ்யா, சீனா உடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் – டொனால்ட் டிரம்ப்
பின்னே, வடகொரியாவினையே அடக்க முடியவில்லை என்றால் இந்த நாடுகளை மிரட்ட நினைத்துபார்க்க முடியுமா?
பெரிய மனுஷன் அடிபட்டால் வெளியில் சொல்லமாட்டான் என்பது இதுதான்