ஆதாரம் கேட்டால்

காமராஜர் நாகர்கோவிலில் நின்றபொழுது ஓடி சென்றார் கருணாநிதி

வடசேரி திருப்பத்தில் “காமராஜரின் வீட்டினை பாருங்கள்..” என பெரும் பேனர் வைத்து அவர் இருந்த வாடகை வீட்டை சொந்தவீடு என்றார்கள

காமராஜர் உருக்கமாக சொன்னார் அது என் வீடு அல்ல‌

அப்படியானால் ஆவணங்களை காட்டு என்றார்கள், வீடுகள் சம்பந்தபட்ட எந்த அரசு அலுவலகத்துக்கும் திமுக வரட்டும் அதிகாரிகளிடம் ஆவணங்களை நாங்களே வாங்கி தருகின்றோம் என்றனர் காங்கிரசார்

அதன் பின் பல்டி அடித்த திமுக கருணாநிதியின் அம்மா கருவாடு விற்றவள், காமராஜர் திருமண வாழ்க்கைக்கு லாயக்கற்றவர் என குதிரையினை வேறு பாதைக்கு திருப்பி சண்டையினை தொடங்கியது

காங்கிரசார் அதற்கு பதில் சொல்லிகொண்டிருந்தனர், வார்த்தை யுத்தம் தொடர்ந்தது

கடைசி அரை திமுகவினர் காமராஜரின் வீடு இருந்த ஆவணத்தை சரிபார்க்க செல்லவே இல்லை காரணம் அது அவரின் சொந்த வீடு அல்ல என்பது அவர்களுக்கு தெரியும்

எதையாவது கிளப்ப வேண்டியது, ஆதாரம் கேட்டால் “சாலையோரம் தூங்குபவனுக்கு பதில் சொல்ல முடியாது” என்பதும் அதை மீறி கேட்டால் குடும்பம் சாதி என இழுப்பதும் அவர்களின் முக்கால அரசியல்

பஞ்சமி நில விவகாரத்திலும் அதே பாணியினைத்தான் கையாள்கின்றார்கள் வேறொன்றுமில்லை