ஆனந்த கண்ணீரை துடைத்துகொள்ளுங்கள்…
தமிழகத்தை ஆள்வது யார் என்பதில் கடும் போட்டி இப்போது சசிகலாவிற்கும் பன்னீர் செல்வத்திற்கும் நிலவுகின்றது.
அடுத்த தேர்தலில் எப்படியாவது முதல்வராக வேண்டும் என முக ஸ்டாலினுக்கும் பெரும் லட்சியம்
இன்னும் பலருக்கு என்றாவது ஒரு நாள் தமிழக முதல்வராக வேண்டும் எனும் ஆசை, சசிகலா 32 வருடம் காத்திருந்தது போல எத்தனைபேர் காத்திருக்கின்றார்களோ தெரியாது
முதல்வர் பணி என்பது என்ன? உண்மையில் அப்பதவி தமிழக மக்களுக்கு சேவை செய்வது
ஆக தமிழர்களாகிய நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்
நமக்கு சேவை செய்ய எத்தனை பேர் போட்டிபோட்டு கொண்டிருக்கின்றார்கள் பார்த்தீர்களா?
சசிகலாவும் பன்னீரும் தான் தான் தமிழக மக்களுக்கு பணியாற்றுவேன் என சண்டையிட்டுகொண்டிருக்க, முக ஸ்டாலின் தலமையில் பெரும் வெயிட்டிங் லிஸ்டே உள்ளது.
தமிழர்களாகிய நமக்கு பணியாற்ற எத்தனை பெரிய சண்டை பார்த்தீர்களா? அந்த அளவிற்கு நாம் இந்த பூமியில் என்ன தவம் செய்துவிட்டோம்?
நம்மை விட கொடுத்துவைத்த இனம் ஏதாவது இந்த பூமியில் இருக்க முடியுமா?
ஆனந்த கண்ணீரை துடைத்துகொள்ளுங்கள்.