ஆன்மீக பெரியவருக்கு பக்தி அஞ்சலிகள்
தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லைஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான்அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரகணக்கான பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார், 16 வயதினிலே அவர் தனியாக உபன்யாசமும், மத விளக்க உரையும் கொடுக்கும் அளவு அவருக்கு ஞானம் மிகுந்திருந்ததுநிச்சயம் அகில இந்திய அளவு, விவேகானந்தர் அளவு வந்திருக்கவேண்டிய மகான் அவர், ஆனால் முருகன் ஆலயம் நிரம்பிய தமிழகத்திலே தன்னை நிறுத்திகொண்டார்அவர் காலம் தமிழ்நாட்டில் நாத்திக அலை சுனாமியாய் பொங்கிய காலம், நாத்திக கூட்டம் ஒரு மதவாதி விடாமல் கரித்து கொட்டி கருப்பு சட்டையும் கொடியுமாக வலம் வந்த காலம்ஆனால் அவர்களுக்கும் உள்ளூர கிருபானந்தவாரி மேல் மதிப்பு இருந்தது, கிருபானந்தவாரியும் கூடுமானவரை அவர்களின் மோதல் போக்கினை பெருந்தன்மையாக தவிர்த்தே வந்தார்இந்துமதத்தின் கொள்கைகள், உபநிஷத்துகள் உணர கஷ்டம் எனும் நிலையில், பாமர மக்கள் அதை புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய தமிழில் சொன்னவர் அவர்எத்தனையோ இதழ்களை நடத்தினார், ஏராளமான புத்தகங்களையும் எழுதினார்சாந்தமான முகம் , பார்த்தால் வணங்கதக்க தோற்றம், அமைதியான மொழி, அழகு தமிழ், வாய்திறந்தால் எம்பெருமான் என தொடங்கும் அந்த கீர்த்தி எல்லாம் இனி யாருக்கும் வாய்க்காதவைஎந்த வாதத்திலும் அவரை வெல்ல முடியாது , எந்த சபையிலும் அவர் தோற்றதுமில்லைசங்க காலத்திலிருந்து வந்த ஆழ்வார்கள், அடியார்கள், புலவர்கள் வரிசையில் நாம் கண்ட மாபெரும் மனிதர் கிருபானந்தவாரிஅதில் சந்தேகமே இல்லைஅந்த அற்புதமான அமைதியான அர்த்தமுள்ள ஆன்மீக சொற்பொழிவினை இனி கொடுக்க யாருமில்லைமுருகன் , ராமாயணம், பாரதம் என இந்து மத பாரம்பரியங்களை அவர் விளக்கினால் பசியின்றி தூக்கமின்றி கேட்டுகொண்டே இருக்கலாம், அவ்வளவு உருக்கமும் அழகும் வாய்ந்த சொற்கள் அவைஇன்று அவர் இல்லாவிட்டாலும் அவரின் பெரும் உழைப்பும் அவரின் பேச்சும், எழுத்தும் என்றும் ஆன்மீக உலகில் நிற்கும், நிலைக்கும்சாட்சாத் முருகபெருமான் அவர் நாவில் இருந்து தமிழ் கொடுத்தான் என்பதை பல இடங்களில் காண முடிந்ததுஇந்த நூற்றாண்டின் மிக சிறந்த தமிழறிஞர்களில் அவரும் ஒருவர், கண்ணில் ஒற்ற கூடிய அழகு தமிழ் அதுஆனால் தமிழ் என்பது தமிழக நாத்திகர்களின் சொத்து அவர்கள் வளர்த்ததே தமிழ் எனும் ஒருவித குருட்டு நம்பிக்கையில் ஆன்மீகவாதியான கிருபானந்தவாரியின் அழகு தமிழ் வெளிதெரியாமல் ஆக்கபட்டதுஇன்று அவரின் நினைவு நாள், அந்த ஆன்மீக பெரியவருக்கு பக்தி அஞ்சலிகள்
இந்துமதத்தின் சிறப்புக்களை, பெருந்தன்மையினை பலாச்சுளையினை தேனில் நனைத்து இனிக்க இனிக்க கொடுத்தவர் அவர்.முருகபெருமானோடு கலந்துவிட்ட அந்த பக்தனுக்கு மீண்டும் அஞ்சலிகள்.கிருபானந்த வாரியரை நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு ஆச்சரியமான விஷயம் நினைவுக்கு வரும்வாரியார் முருக பக்தர், அவருக்கு முருகனை மனத்தால் வழிபட்ட எம். ஜி ராமச்சந்திரன் மேல் ஒரு பார்வை இருந்ததுராமச்சந்திரன் முருக பக்தரான சின்னப்பா தேவரால் வளர்க்கப்பட்டு முருகனின் அடியார் பசும்பொன் தேவரின் கூட்டத்தால் ஆட்சிக்கு வந்தவர்பெரும் நாத்திக இயக்கமும் தமிழ்நாட்டின் ஆன்மீகத்தையே அழிக்க வந்த இயக்கமான தி மு கவின்பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டவர் , இன்றும் அவர் தொடங்கிய கட்சியே நாத்திகத்துக்கு இங்கு சவால் விடுகின்றதுஇதை மனமார உணர்ந்த வாரியார் ராமச்சந்திரனுக்கு பொன்மன செம்மல் என பட்டம் அளித்தார்.ஆம் ராமச்சந்திரன் மட்டும் வந்திருக்காவிட்டால் தமிழ்நாடு மாபெரும் சிக்கலை சந்தித்திருக்கும் இங்கு இந்துமதம் பெரும் அழிவினை கண்டிருக்கும்அந்த ஆபத்தை தடுக்க முருகன் அனுப்பிய வேலாக ராமச்சந்திரனை தன் மனத்தால் கண்டார் வாரியார், அது மாபெரும் உண்மையும் கூடமிக சரியான அவதார பார்வை அது..நாடாகும் காட்சிகளை கண்டால் உங்களுக்கே புரியும், இங்கு நாத்திக திமுகவின் அரசியலை தடுக்கும் சக்தி ராமச்சந்திரனின் கட்சிக்குத்தான் உண்டு.இதெல்லாம் காலத்தின் கணக்குகள் ..பண்டைய ஞானிகள் ரிஷிகள் வரிசையின் மீட்சியாக நம்மிடம் வாழ்ந்த மகான் வாரியார் சாமிகள்.முருகனின் ஏழாம் நட்சத்திரம் அவர், ஆறுமுகத்தானின் ஏழாம் முகம் அவர்…அவரின் படமும் அவரின் போதனையும் எல்லா இந்துக்கள் வீட்டிலும் இருக்க வேண்டும், எல்லா தலைமுறைக்கும் அவரை கொண்டு செல்ல வேண்டும்.அந்த வாரியார் சாமிக்கு ஞான பெரியவருக்கு ஆன்மீக கனிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.