ஆம்பிளைங்கதான் பொறுமைசாலிக, கோபமே வராது
அந்த படம் நினைவில்லை ஆனால் காட்சி நினைவிருக்கின்றது
கலைவாணர் தன் காதலியிடம் பேசுவார், காதலியும் பதில் சொல்லும்
இந்த பாரு, ஆம்பிளைக்குதான் பொறுமை அதிகம், பொம்பிளைங்க எல்லாம் கோவக்காரிங்க
எவன் சொன்னான்? பெண்கள்தான் பொறுமைக்காரங்க கோபமே வராது
இல்லடி ஆம்பிளைங்கதான் பொறுமைசாலிக, கோபமே வராது
போய்யா சும்மா சொல்லிட்டு,

பொம்பிளைங்கதான் பொறுமைசாலிகண்ணு உலகத்துக்கே தெரியுமே”
அப்படியா என சொல்லிவிட்டு காதலியினை முத்தமிட செல்வார் என்ன்.எஸ.கே
அந்தம்மா “என்னாய்யா யாருண்ணு நினைச்சே, கிட்ட வந்தே கொன்னுபுடுவேன். எவ்வளவு நாளா இந்த கிறுக்கு புத்தியோட அலைஞ்சே , இனி பேசாதே” என சீறும்
தன் வழக்கமான சிரிப்பினை சிரித்தபடி சொல்வார் என்.எஸ்.கே
“பார்த்தியா, உனக்கு கோபம் வந்துட்டு, இப்போ நீ வந்து எனக்கு முத்தமா கொடு , எனக்கு கோபமே வராது
ஆம்பிளைங்க அப்படித்தான் பொறுமைசாலிக, கோபமே படமாட்டாங்க..”