ஆய்வுகுரிய விஷயம்

நெல்லை மாவட்டம் கூந்தன் குளத்தில் இடிதாக்கி பறவை கூட்டம் கொத்தாக மடிந்திருக்கின்றது

இது ஆச்சரியமான விஷயம்

பொதுவாக பறவைகள் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்பவை, இயற்கையின் எல்லா சீற்றமும் அவைகளுக்கு அத்துபடி, மிக முன்னெச்செரிக்கையாக தங்களை காத்துகொள்ளும்

புயலாலும் மழையாலும் இல்லை கடும் வெயிலாலும் அவை பாதிக்காபடுவதில்லை எப்படியாவது தன்னை தற்காத்துகொள்ளும்

எல்லா இயற்கை நுண்ணறிவும் அவைகளுக்கு உண்டு, இயற்கைக்கும் அவற்றிற்குமான தொடர்பு அப்படி

சுனாமி வருவதற்கு முன்பும் இன்னும் பல இயற்கை சீற்றத்திற்கு முன்னும் பறவை கூட்டம் எச்சரிப்பதுண்டு

மழைகுருவி முதல் ஏராளமான பறவைகள் மழை வரவை அட்டகாசமாக கணிக்க கூடியவை

அப்படிபட்ட பறவை கூட்டம் கொத்தாக மடிந்திருப்பது ஆச்சரியமே

மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பு இப்பொழுது முறிந்தாயிற்று, முன்பென்னாலும் தன் உள்ளுணர்வாலும் இன்னும் பல இயற்கையின் முன்னறிவிப்பாலும் மழை மற்றும் வறட்சியினை முன்பே அறிந்து கொள்ளும் அந்த உணர்வினை இழந்துவிட்டான்

அதை இப்பொழுது விஞ்ஞானம் எடுத்துகொண்டது, அதற்கும் இயற்கைக்கும்தான் இப்பொழுது தொடர்பு, விஞ்ஞான கருவிகள் சொல்வதை மனிதன் கேட்டுகொள்கின்றான்

ஆனால் பறவைகளுக்கும் இயற்கைக்குமான தொடர்பு எப்படி முறிந்தது? இந்த கொடுமை எப்படி நடந்தது?

ஆழ்ந்த ஆய்வுகுரிய விஷயம் அது

கூந்தன்குளத்தில் எல்லா நாட்டு பறவைகளும் உண்டு, எங்கிருந்தோ வந்து அங்கு கூடி இறந்துவிட்ட அந்த புள்ளினங்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்