ஆர்கே நகரின் 20 ரூபாய்…
உலகிலே மதிப்பு வாய்ந்த பணம் குவைத் மற்றும் பஹ்ரைன் தினார்கள், ஒரு தினார் இந்திய பணம் 200 ரூபாய்க்கு மேல் வரும்
ஆனால் அதனையும் தாண்டி சாதனை படைத்திருப்பது ஆர்கே நகரின் 20 ரூபாய் , அதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாம்.
பழனிச்சாமி ஆட்சியில் ஆர்.கே நகர் மட்டும் பணக்கார தொகுதியாயிருக்கின்றது ஆச்சரியம்
இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அந்த விவகாரம் விஸ்வரூபமாகின்றது, சொன்னபடி 20 ரூபாயினை மாற்றி 10 ஆயிரம் தரவில்லை என பலர் கொந்தளிக்கின்றனர், அந்த அடிதடியில் சிலர் கைதும் செய்யபட்டிருக்கின்றனர்
இவர்கள் வாக்குமூலம் நிரூபிக்கபட்டால் தினகரன் பதவி இழக்கலாம் வாய்ப்பு இருக்கின்றது.
நாங்கள் அப்படி வாக்கு வாங்கவில்லை என தினகரன் தரப்பு சொல்லிகொண்டாலும், இந்த இமாலய வெற்றிக்கு பின்னும் நன்றி தெரிவிக்க ஆர்.கே நகருக்கு தினகரன் செல்லாது ஏன்? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை
சொன்னபடி பணம் கொடுக்காமல் நன்றி தெரிவிக்க சென்றால் குக்கரால் அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் இன்னும் தினகரன் அப்பக்கம் செல்லாமல் இருக்கின்றார் என்ற செய்திகளும் கசிகின்றன
விஷயம் வேறுமாதிரி செல்கின்றது. திடீர் சுவாரஸ்யங்கள் திருப்பங்கள் நடந்தாலும் நடக்கலாம்
தினகரன் ஏன் நன்றி தெரிவிக்க செல்லவில்லை? வாக்களித்த வாக்காளர்களை சந்திப்பதை விட அவருக்கு என்ன அவசரம் இருக்கின்றது?