ஆர்.எஸ்.எஸ்

பிரிட்டிசாரிடம் சிக்கிய இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என தேசம் போராடியபொழுது சுதந்திரம் அடைந்து என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் யாரிடமும் அன்று இல்லை

ஆப்கானியரோடு நடந்த இந்து விடுதலை யுத்தத்தில்தானே வெள்ளையன் புகுந்தான் அப்படியானால் விடுதலையின் நோக்கம் என்ன என்பதை யாரும் சிந்திக்கவில்லை

சுதந்திரம் கிடைத்தால் இத்தேசம் என்னென்ன விளைவுகளை சந்திக்கும், என்னென்ன பாதிப்பு வரும், இந்தியா எப்படி சுதந்திரபோராட்ட நோக்கில் அதாவது ஆயிரமாண்டு போராட்ட பாதையின் இலக்கில் இருந்து மாறும் என யாரும் யோசிக்கவில்லை

அந்த இயக்கம்தான் இதனையெல்லாம் யோசித்தது, அவர்கள்தான் எதிர்கால இந்தியா எப்படிபாதுகாப்பாக இருக்கமுடியும் என முதலில் கருதினார்கள்

அவர்கள்தான் சரியான பாதையும் அஸ்திபாரமும் அமைத்தார்கள், அவர்களை பற்றி அந்த உன்னத இயக்கம் பற்றியும் அவர்கள் எழுந்து செய்த புரட்சி பற்றியும் ஒவ்வொரு இந்தியனும் அறிவது கடமையாகின்றது

ஆர்.எஸ்.எஸ் இன்று தேசத்தை காத்து நிற்கும் பெரும் அமைப்பு, உலகின் மிகபெரிய அமைப்புக்களில் ஒன்று, ஏன் உலகின் மிகபெரிய இயக்கமும் அதுதான்

எப்படி உருவாகி வளர்ந்தது ஆர்.எஸ்.எஸ்?

இந்தியா எக்காலமும் அந்நியரை விரட்டி தன்னை காத்துகொள்ள உணர்ச்சியுடன் போராடிய நாடு, கிரேக்கர் காலத்தில் மவுரியர், கலீபா காலத்தில் ராவால் , மொகலாயர் காலத்தில் வீரசிவாஜி என காலத்துக்கேற்ற தலைவனும் படையும் எழும்பி கொண்டே இருந்தது

கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான போர் தமிழகத்தில் தொடங்கிற்று

பூலித்தேவன் தொடங்கிவைத்த ஆயுத வழியினை 1857ல் கிழக்கிந்திய கம்பெனி நசுக்க ஏக பிரிட்டிஷ் இந்தியா பிரிட்டன் அரசின் கட்டுபாட்டுக்கே சென்றது

இங்கு அதன்பின் சுதந்திர குரல்கள் கொஞ்சகாலமில்லை திலகர், வ.உ.சி என அடுத்த கட்டம் ஆரம்பிக்க அதன் பின் காந்தி வந்து மூன்றாம் இன்னிங்க்ஸை தொடங்கியபின் சுதந்திரம் வந்தது

இந்தியாவில் இந்தியர் உரிமைக்காக ஹியூம் எனும் வெள்ளையனால் தொடங்கபட்டது காங்கிரஸ், ஆம் அது சுதந்திரம் பெறும் இயக்கம் அல்ல, இந்தியாவினை காக்க வந்த இயக்கமும் அல்ல மாறாக பிரிட்டிசாரிடம் உரிமை பெற்று தர உருவான இயக்கம்

இதனை அன்றே பலபேருக்கு பிடிக்கவில்லை, இது ஒருமாதிரி இயக்கமாக இருக்கின்றது இதன் கொள்கைகள் வெள்ளையன் சார்பாக ஒருவித சாத்வீகமாக இருக்கின்றது, இந்த இயக்கத்தால் வெள்ளையனிடம் உரிமை கோர முடியுமே தவிர சுதந்திரம் கோரமுடியாது, இது அவர்கள் கைக்கு கட்டுபட்ட இயக்கம் என்ற முணுமுணுப்பு வந்தது

அந்த முணுமுணுப்பினை உண்மையாக்க தன் உயிரை கொடுத்தவர் நேதாஜி

காங்கிரசுக்கு எதிராக அல்லது அது செய்ய தவறிய விஷயங்களை செய்ய பல இயக்கங்கள் எழும்பின அதில் அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம்ரூல் போன்றவை உண்டு ஆனாலும் அவை பரிபூரண இந்திய விடுதலையினை பேசாது

அப்பொழுது உலகெல்லாம் ஒரு மாறுதல் வந்தது, 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வந்த நாகரீக மறுமலர்ச்சி 19ம் நூற்றாண்டில் ஒவ்வொரு நாட்டையும் தொட்டது

எல்லா நாட்டிலும் அவரவர் கலாச்சாரமும் பாரம்பரியமும் காக்க பெரும் புரட்சியும் இயக்கங்களுமாக தோன்றி கொண்டிருந்தன‌

அது முதல் உலகப்போர் முடிந்து உலகெல்லாம் ஒருவித மாற்றம் வந்த நேரம், ஜெர்மன் ஈரான் போன்ற நாடுகளில் தங்களின் மண் காக்க, கலாச்சாரம் காக்க பல இயக்கம் எழும்பின‌

இந்தியாவில் அப்படி இதே நாளில் எழும்பிய இயக்கம்தான் ராஷ்டிரிய சேவா சங்கம் அதாவது ஆர்.எஸ்.எஸ்
அது இந்து மகாசபையின் தொடர்ச்சி என்பார்கள், இந்து மகா சபையின் சில கொள்கைகளில் இருந்து விலகி நாடே முக்கியம், நாடு நிலைபெற அதன் கலாச்சாரமும் வேரும் முக்கியம் என தொடங்கபட்டது இச்சங்கம்

அதன் தொடக்கபுள்ளி பெரும் நதி தோன்றும் மூலம் போல சிறு ஊற்றே, ஐரோப்பாவில் ஜெர்மன் எழுவது போல், பிரிட்டன் எழுவது போல், சீனத்தில் பெரும் மாறுதல் வருவது போல் இந்தியாவிலும் இந்தியர் இந்திய கலாச்சார மக்கள் எனும் எழுச்சி வரவேண்டும் என்ற சிந்தனையில் தொடங்கபட்ட இயக்கம் அது

அது ராஷ்ட்ரிய சேவா சங்கம் ஆயிற்று. உண்மையில் இந்தியாவின் கலாச்சாரமும் ஒற்றுமையும் தர்மமும் காக்க தொடங்கபட்ட அமைப்புத்தான் அது

காங்கிரஸின் அணுகுமுறை என்பது வெள்ளையன் நட்டுவைத்த மரம் இருக்கட்டும், அவன் வெளியேறினாலும் நாம் அதை நீரூற்றி வளர்போம் எனும் கொள்கையில் இருந்தது

ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ இது நம் மண் நம் கலாச்சரமும் தர்மமும் அடையாளமும்தான் வளரவேண்டும் அதை அழித்துத்தான் வெள்ளையன் மரம் நட்டான், அவனுக்கு முன் ஆப்கானியர் நட்டார்கள், அதையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு நம் தர்மம் வளர பாடுபடவேண்டும் எனும் கொள்கையில் இருந்தது

ஒருவகையில் காங்கிரஸ் செய்தது வெறும் 150 ஆண்டுகாலத்துக்கு முன்னதான நிலை வேண்டும் என்பது, அதாவது ஒரு குழப்பமான அரசியல் வேண்டும் என்பது அதில் இந்திய பாரம்பரியம் இருக்காது, இந்து மதம் இருக்காது, அழிந்த இந்து ஆலயம் அப்படியே கிடக்கும்

அழிந்துகிடந்த காசி ஆலயம், சோம்நாத்பூர் ஆலயமெல்லாம் அப்படியே கிடக்கட்டும், இந்து பாரம்பரியம் ஒழியட்டும், மதமாற்றம் நடக்கட்டும், இந்தியா எத்தனை துண்டாகவும் உடையட்டும் எனும் குழப்பமான கொள்கைகள் அவர்களிடம் இருந்தன‌

சுருக்கமாக சொன்னால் எதற்கு சுதந்திரம் கேட்கின்றோம் என்பதே அவர்களுக்கு தெரியவிலை

ஆர்.எஸ்.எஸ் கேட்டதோ ஆப்கானியருக்கு முந்தியிருந்த அந்த தர்ம பூமி வேண்டும் என்பது, ஆயிரம் ஆண்டுகளாக அழிந்து கிடக்கும் இந்த தர்ம பூமி தன்னைமீட்க வேண்டுமென்பது

வீரசிவாஜியும், விவேகானந்தரும் சொன்ன அந்த வழியில்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவாகி வந்தது

இந்த புள்ளியில் சிந்தியுங்கள், ஆர்.எஸ்.எஸ் என்பது எவ்வளவு தீர்க்கமான இயக்கம் என்பது புரியும்

அவர்கள் பப்பா ராவல் தொடங்கி வீரசிவாஜி, புலித்தேவன் வரையான அந்த இந்து இந்தியா எனும் பெரும் அடையாளத்தை மீட்க பாடுபடும் பெரும் கனவின் தொடர்ச்சி என்பது புரியும்

அவர்களுக்கு அன்று பெரும் பலமில்லை, பணம் இல்லை, ஆதரவு இல்லை, காங்கிரஸ் வெள்ளையன் என இரு எதிரிகளை ஒரே நேரத்தில் சந்தித்தார்கள்

ஆனால் முடிந்தவரை இயக்கம் வளர்த்து தங்கள் கொள்கைகளை பரப்பினார்கள், கோஷா என்றார்கள், நாட்டை தாங்கும் தலைமுறை எப்படி இருக்கவேண்டும் என பயிற்சி கொடுத்தார்கள்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதல் பலம் அதன் எளிமை, விளம்பரமே இல்லாத, ஆர்பாட்டமே இல்லாத‌ அந்த மகா எளிமை அதில்தான் அந்த இயக்கம் வலுபெற்றது

நாட்டின் பெருமையும் கலாச்சாரமும் சொல்லிகொடுத்தார்கள், அதை இழந்தால் வரும் ஆபத்தை எச்சரித்தார்கள். நாட்டை நேசிக்கும் ஒருவன் எக்காலமும் எந்த சூழலுக்கும் தயாராய் இருக்க உடலை வலுவாக வைத்திருக்க பயிற்சி கொடுத்தார்கள்

இதுதான் அவர்கள் பயிற்சி முகாம், அது தவறான சிந்தாந்தமும் அல்ல தற்கொலைபடையினை உருவாக்கும் இடமுமல்ல, பெட்ரோல் குண்டு செய்ய கற்றுதரும் இடமுமல்ல, அந்நிய மண்ணை அபகரிக்கவோ இல்லை உலகை மிரட்டவோ தயாராகும் இடமுமல்ல‌

நம் மண் நம் கலாச்சாரம் அதை காக்க ஒரு இயக்கம் என கிளம்பினார்கள்

அதை அன்றே சிவாஜி, நாயக்க மன்னர்கள் என முயன்றார்கள் சில வெற்றிபெற்றார்கள் அதன் தொடர்ச்சித்தான் ஆர்.எஸ்.எஸ்

சுவாமி விவேகானந்தர போதித்த வழி வந்த இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ்

தொடக்கத்தில் அது கேட்பாரற்றுதான்இருந்தது, காந்தி பிரிட்டிசார் பெரும் நிஜாம்கள், நவாப்கள், ஷாக்கள் என பெரும் சக்தி முன்னால் அது வெறும் தூசு போலத்தான் அடையாளம் காணபட்டது

ஆனால் அதன் விஷேஷித்த தன்மை அதை வளர செய்தது, குறிப்பாக இந்நாட்டினை பிரித்தல் கூடாது என அது வரிந்து கட்டி கிளம்பிய பொழுதுதான் அது கவனிக்கபட்டது

ஆம் அன்று பிரிவினை வேண்டாம் என முதலில் தேச ஒற்றுமையினை வலியுறுத்திய ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் மட்டும்தான்

ஆம், அவர்கள் இஸ்லாமியரை வெறுக்கவில்லை, வெட்டி சரிப்போம் என கிளம்பவில்லை, உனக்கு நாடு இல்லை என சொல்லவே இல்லை. நம் நாட்டில் நாம் வசிப்போம் இது பரந்த இந்துஸ்தான் அதில் எல்லோரும் வாழலாம் என்றுதான் அழைத்தார்கள்

ஜின்னாவின் பிடிவாதத்தை காந்தி கண்டிக்க மறுத்தபொழுதுதான் சிக்கல் வெடித்தது, காந்திக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் மோதல் வெடித்தன‌

வெள்ளையனை எதிர்த்த காந்தி ஜின்னாவிடம் ஏன் பம்மினார்?

மதுரை வரை வந்த காந்தி கேரளாவின் மாப்ளா கலவரம் இடத்துக்கு செல்லாதது ஏன்?

ஏன் கடைசிவரை வீட்டு சிறை என்றால் நிஜாம் பங்களாக்கில் காந்தி அடைகலமானார்? சாவர்க்கர் அந்தமானில் தவிக்க காந்திக்கும் நேருவுக்கும் ஏன் உல்லாச சிறைகள்?

இதெல்லாம் வரலாற்றில் விடையில்லா கேள்விகள்..

பொதுவாக அன்றைய போராட்டத்தில் தீவிரமாக இருந்த வங்காளி, பஞ்சாபியர் இன்னும் சில முன்னணி போராளி மக்களுக்கு காந்தி பிடித்தமானவர் அல்ல, அதுவும் அவர் தேசம் பிரியும் அளவு அனுமதித்தபொழுது அவர்கள் கடுமையாக எதிர்த்த்தனர்

பகத்சிங் விவகாரம் முதல் தங்கள் உயிரணைய லாகூர் பாகிஸ்தானுக்கு செல்வதை பஞ்சாபியர் விரும்பவில்லை, கிழக்குவங்கம் தனிநாடு ஆவதை வங்கத்தாரும் விரும்பவில்லை

காந்தி அதை கண்டிப்பது போல் கண்டித்தாரே அன்றி மனதார அவர் ஜின்னாவுக்கு நெருக்கடி கொடுக்க எண்ணவில்லை, அது காந்திமேல் மக்களுக்கு கோபத்தை அதிகரித்தது

காந்தி நினைத்திருந்தால் தேசம் பிரிவதை தடுத்திருக்கலாம், ஆனால் அந்த மனிதரின் அளவுக்கதிகமான அஹிம்சையில் அவர் மக்களை விட்டு விலகியிருந்தார் , தன்னை போல எல்லா இந்துக்களும் இருக்கவேண்டும் என அவர் எதிர்பார்த்தது பெரும் தவறு..

அதுவரை விவகாரம் எல்லை மீறி செல்லவில்லை, தேசபிரிவினைக்கு காந்தி சம்மதித்ததும் அதையும் மீறி தேசம் எரிந்தபொழுது காந்திக்கு நிலமையின் விபரீதம் புரிந்தது, தன் தவறை உணர்ந்தார் காந்தி

அவரைத்தான் சுட்டு கொன்றான் கோட்சே, நிச்சயம் அது மொத்த இந்திய கோபமேயன்றி அவனின் தனிபட்ட கோபம் அல்ல. அது ஏற்றுகொள்ளமுடியாத விஷயம் என்றாலும் காந்தியின் செயல்பாடுகள் சரியானவை அல்ல‌

கோட்சே காந்தியினை கொன்றான் என்பவர்கள் அதற்கு முன் காந்தி மேல் நடந்த கொலைமுயற்சிகளையும் ஏன் கோட்சே 3 குண்டுகளை சுட்டபொழுது 4ம் குண்டு எங்கிருந்து வந்தது என்பதையும் சொல்லமாட்டார்கள்

ஆம், காந்தியின் அடாவடி பொறுக்காமல் அவரை கொல்ல பலர் கிளம்பியிருக்கின்றார்கள், கோட்சே சிக்கி கொண்டான் அதுதான் நிஜம்

ஆர்.எஸ்.எஸ் அதில் மிக கடுமையாக பாதிக்கபட்டு தடை செய்யபட்டது என்றாலும் கொஞ்சமும் தன் கொள்கைகளில் இருந்து அது மாறவில்லை

இந்நாட்டில் உண்மையான நாட்டுபற்றினை அது உருவாக்க தொடங்கபட்ட இயக்கம் என்பதை எந்நாளும் மெய்பித்தே வந்தது, காந்தி கொலைக்கு பின்பும் அது முடங்கவில்லை வளர்ந்தது

அந்த இயக்கம் மேல் பல சர்ச்சைகளை சொன்னாலும் அதன் ஒரு விஷயம் நோக்கதக்கது, ஆரம்பத்தில் இருந்தே அது எச்சரித்த விஷயங்கள்தான் நடந்தன‌

“இந்தியாவினை பிரிய விடாதே, காஷ்மீரை இப்படியே விட்டுவைக்காதே, சீனாவினை நம்பாதே, உள்நாட்டில் ஜனநாயகம் சிறுபான்மை மதசுதந்திரம் மாநில சுயாட்சி என கட்சிகளை ஆடவிடாதே…..” என போதித்த விஷயம் முதலில் கிண்டலாக பார்க்கபட்டாலும் பின்னாளில் அவை எல்லாம் உண்மையானபொழுது நேருவே அவர்களை அணைத்து கொண்டார்

இத்தேசம் ஒரே தேசமாய் செழித்து ஒன்றாய் வளரவேண்டும் என்ற நோக்கத்தில் இன்றுவரை கொஞ்சமும் விலகாமல் நடக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்

நேரு அணைத்த ஆர்.எஸ்.எஸ் கண்டு இந்திராவும் அஞ்சினார், வங்கபோரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் உதவிகள் மிக அதிகமாக இருந்தன, போரில் அகதியாக வந்த மக்களை பாதுகாத்தல் இந்திய ராணுவத்துக்கான உதவிகள் என அது கடும் தேசசேவை செய்தது

ஆனாலும் 1975ல் மிசா காலத்தில் அதை தடை செய்தார் இந்திரா, திமுகவினை கூட தடை செய்யாமல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவர் தடை செய்ததில் அதன் பலம் தெரியும்

அதிலிருந்தும் மீண்டது அந்த இயக்கம்

அதன் அடுத்த சர்ச்சை அயோத்தி ராமர்கோவில், அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அல்ல மாறாக இந்து எழுச்சி

அந்த சிக்கல் பாஜக காலத்திலோ ஆர்.எஸ்.எஸ் காலத்திலோ உருவானது அல்ல, பாபரை மன்னன் ராணா சங்காவினையும், சங்கர சிம்மனையும் எதிர்த்து அடித்த காலத்திலே உருவானது

நிச்சயம் அதன் மூலம் பாபர் வந்த காலத்தில் தொடங்கி மொகலாயரிடம் இருந்து பிரிட்டிசார் ஆட்சியினை பெற்றதில் வளர்ந்து பின் அத்வாணி காலத்தில் வெடித்தது

இந்து எழுச்சிக்கான தீர்ப்பினை நீதிமன்றமே கொடுத்தது

இந்த இரு சம்பவங்களையும் எடுத்துவிட்டு பார்த்தால் அதன் நாட்டுபற்றில் குறை சொல்லமுடியாது, தேசம் எரிந்தபொழுது எல்லையில் நின்றவர்களும் அவர்களே, சீனப்போர் வங்கப்போரில் மீட்புக்கு நின்றவர்களும் அவர்களே

இதை நேருவும் இந்திராவுமே பாராட்டினர் என்பது கவனிக்கதக்கது

கார்கில் போர் முதல் இப்பொழுது காஷ்மீர் விவகாரம் வரை மிக சரியான வழிகளை சொன்னவர்கள் அவர்களே..

அந்த இயக்கம் 1925 ஒரு விஜயதசமி அன்று தொடங்கபட்டது, அன்று விஜயதசமி செப்டம்பர் 27ம் தேதி வந்தது

விரைவில் விஜயதசமி வரும் நிலையில் அது தன் 97ம் ஆண்டு விழாவினை கொண்டாட போகின்றது

விஜயதசமியில் தொடங்கும் விஷயம் இப்படித்தான் மாபெரும் வெற்றியாகும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் உதாரணம்

அவர்களின் குரலில் முழு தேசபற்று ஒன்றே இருக்கின்றது, அதை மறுக்க முடியாது

இத்தேசத்தை பிளந்து ஒரு பகுதி பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என்றும் இன்னொரு பகுதி சமயசார்பற்ற இந்தியா என்பதும் ஏற்றுகொள்ளமுடியாத அநியாயம், இந்து இந்து நாடே அவ்விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் சொல்வது சரி

இது கலாச்சார மத ரீதியாக இந்து நாடு, அதை பிரித்துவிட்டால் இங்கு அடையாளம் ஏதுமில்லை அவ்வகையில் அவர்களின் கோரிக்கையும் கோட்பாடும் சரி

ஒரு நாடு உலகளவில் அடையாளபட ஒரே குடையில் வர ராஷ்ட்ரிய பாஷா அவசியம் என இந்தியினை சொல்வதும் சரி, எல்லா நாட்டுக்கும் உள்ள அடையாளம் அது

ஆர்.எஸ்.எஸின் சிந்தனை அப்படியே யூதரின் சியோனிச சாயல் அதாவது உலகெல்லாம் வாழும் யூதர்கள் எந்தமொழி பேசினாலும் யூதனே அவனுக்கான நாடு இஸ்ரேல் என்பது அவர்கள் சித்தாந்தம்

இந்தியர்களையும் அப்படி இந்தியன் எனும் அடையாளத்தோடும் இந்து எனும் அடையாளத்தோடும் ஒன்றுபடுத்துகின்றார்கள், நாடு நிலைபெற பலமாக அது சரியான வழியே

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எல்லை போர்களில் பங்கெடுத்தது, அது அழிந்த இந்து ஆலயங்களை மீட்டது இன்று சோமநாத புரி, அயோத்தி என இந்துகோவில்களெல்லாம் எழுந்து வர ஆர்.எஸ்.எஸ் எனும் இயக்கம் ஒன்றுதான் அடித்தளம் என்பதுதான் அவர்களின் வரலாற்றின் வெற்றி

அசைக்க முடியா வெற்றி

ஆனால் தமிழகம் இந்துமதத்தையும் அதற்கு எழுந்த ஆபத்தையும் இன்னும் முழுமையாக உணரவில்லை காரணம் ஆப்கானியர் போன்ற மிகபெரிய அழிவுகளை இங்கு அவர்கள் மறந்துவிட்டார்கள்

வடக்கே யாரும் மறுக்கவில்லை, இவர்கள் மறந்தே போனார்கள். 1300களில் மாலிக்காபூர் துக்ளக்கும் அழித்த அழிவையும் பிற்காலத்தில் மிஷனரிகள் கொடுத்த அழிவும் இவர்களுக்கு மறந்தே விட்டது

மதுரை ஆலய வாசலிலும், திருச்சி திருவரங்க வாசலிலும், தஞ்சை பெரியகோவிலை மூடியிருந்த தங்க தகடுகளை மாலிக்காபூர் கொள்ளையடித்ததை அந்த ஆலய வாசலிலும் எழுதிவைத்திருந்தால் அந்த வலி ஒவ்வொரு தமிழனுக்கும் புரியும்

ஆனால் திருவரங்க கோவிலில் மாலிக்காபூரின் பெரும் களபேரமும் உலுக்கானின் அட்டகாசமும் மறைக்கபட்டு அந்த அழிவுகள் பற்றி குறிப்பே இன்றி அதன் வாசலில் ஈரோட்டு ராம்சாமி சிலையினை வைத்தது என்பதெல்லாம் மாபெரும் வரலாற்று திரிபு

தமிழக இந்து திசைமாறி செய்யபட்ட சதி

திருவரங்க கோவில் முன் மாலிக்காபூரும் உலுக்கானும் செய்த அழிவு பற்றிய வரலாறு இருக்கவேண்டுமே தவிர ராமசாமி சிலை அல்ல‌

தமிழகத்தில் மிஷனரிகளால் அவர்களின் கைகூலிகளால் இந்துமதம் பற்றிய ஒருமாதிரியான தோற்றம் அதற்கு உருவாக்கபட்டிருக்கின்றது , இந்துக்களின் ஆலயங்களும் அடையாளங்களும் பாழ்பட்டு கிடைக்கின்றது பாதி அழிந்தே விட்டது

அவற்றை மீட்டெடுக்க ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கம் அவசியமே என்பதில் சந்தேகம் இல்லை

ஒவ்வொரு நாடும் இனமும் தன் மதம் காக்க கலாச்சாரம் காக்க படும் பாடு கொஞ்சமல்ல, மொழியால் வேறாயினும் சீனா ஒன்றாக நிற்க அவர்களின் கலாச்சார ஒற்றுமையே காரணம்

ஆம் மாண்டரின் பெருமொழியாயினும் இன்னும் ஏகபட்ட சிறுபான்மை மொழிகள் உண்டு ஆனால் கலாச்சாரம் அவர்களை ஒருங்கிணைத்தது, மாண்டரின் மொழி இணைத்திருக்கின்றது

சீனா போல இந்தியாவும் எழும்பி நிற்கவும், பெரும் சக்தியாய் உலகை மிரட்டவும் கலாச்சார ரீதியான பிணைப்பு மகா அவசியமானது

அன்றே கங்கைகரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், இங்கிருந்து காசிக்கும் கைலாசத்துக்கும் செல்லும் பிணைப்பு இருந்திருக்கின்றது

கனகவிசயர் காலமல்ல ராஜராஜ சோழனும் கங்கையில் இருந்து நீர் கொண்டுவந்துதான் இங்கு குடமுழுக்கு நடத்தினான் என்கின்றது வரலாறு, அந்த அளவு கலாச்சார ரீதியாய் , மதரீதியாய் ஒரே தேசமாய் இந்நாடு இருந்திருக்கின்றது.

அது இன்னும் பலபடுத்தபடல் வேண்டும், இந்து தர்மம் அதை செய்யும்

அரசியலையும் வரலாற்றையும் நோக்குபவராக எம்மால் ஒன்றைத்தான் சொல்லமுடியும்

யூத இனம் 2000 வருடம் போராடியது , இன்றிருக்கும் ஜெர்மன் பல வகைகளில் உருமாறி வந்தது, ஜப்பான் முதல் துருக்கி வரை ஆட்சிமாற்றங்களுக்கான போராட்டம் அதிகம்

ஆனால் தொடங்கபட்டு வெறும் 71 வருடத்திற்குள் ஆட்சிக்கு, அதுவும் பல பெரும் தடைகளை கடந்து வந்து 80 வருடத்திற்கும் அசுரபலம் பெற்றிருக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்

ஒரு சாதாரண இயக்கம் இவ்வளவு வேகமாய் வளர்ந்து அதுவும் கத்தியின்றி துப்பாக்கியின்றி வன்முறையின்றி வளர்ந்திருப்பது மானிடரால் நடக்கும் காரியம் அல்ல, பிரபஞ்ச சக்தி அதோடு இருக்கின்றது

ஆம் இன்று அதுதான் அசைக்கமுடியா ஆட்சியினை நடத்துகின்றது, அந்த அமைப்பிடம் நாம் ஆச்சரியபடும் விஷயம் அது ஒருநாளும் அரசியலுக்கு வராது ஆனால் ஆட்சியினை கட்டுபடுத்தும்

இது உலகில் எந்த இயக்கத்திடமும் இல்லை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் மட்டும் சாத்தியம்

80 ஆண்டுகளுக்குள் இத்தேசம் அவர்களை தலைமேல் ஏற்றுகொண்டதென்றால் இம்மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயத்தை மிக சரியாக செய்துகொண்டிருக்கின்றார்கள் என்றே பொருள்

அவர்கள் தீர்க்கதிரிசனம் பல இடங்களில் உணரபட்டது, அந்த அளவு நாட்டுபற்று அவர்களுக்கு இருந்திருகின்றது

அவர்களின் கணக்கும் உழைப்பும் துல்லியமானது, வீழ்த்தமுடியா காங்கிரஸை வீழ்த்தினார்கள், 3ம் அணி 4ம் அணி என மாநில கட்சிகள் அட்டகாசத்தை ஒழித்தார்கள்

மிக திட்டமிட்டு ஒவ்வொரு விஷயமாக காய்நகர்த்தி வருகின்றார்கள், கம்யூனிஸ்டுகளும் அவர்கள் முன்னால் காலி

எஞ்சி இருப்பது வெகு சில கட்சிகளே, காங்கிரஸ் எனும் யானையினை ஒடுக்கி அமரவைத்தவர்களுக்கு அந்த சில பூனைகள் விஷயமே அல்ல‌

அதை காலம் காட்டட்டும்

என்னதான் சொன்னாலும் தமிழ்நாட்டில் பலர் கண்டபடி பேசினாலும் ஆர்.எஸ்.எஸ் ஒரு ஆச்சரியமான இயக்கம்

உண்மையான நாட்டுபற்று அங்கே இருக்கின்றது, நல்ல தலைவர்களை அடையாளங்களை வாரிசு இம்சையின்றி உருவாக்குகின்றார்கள்

நாட்டுபற்று கூடவே உண்மை ஜனநாயகம் அங்கிருக்கின்றது, இந்நாட்டின் கலாச்சாரத்தை காக்கவும் பாடுபடுகின்றார்கள்

டீகடை பணியாளரும் பிரதமர் ஆகலாம் எனும் சமூக நீதி அவர்களால்தான் காக்கபடுகின்றது

ஒரு விஷயத்தை அவர்களின் எதிரிகள் கூட ஒப்புகொள்ள வேண்டும், அது அவர்களின் எளிமை மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட விஷயம்

ஆம், பெரும் ஊழல் எதுவும் அவர்கள்மேல் இல்லை அவர்களின் ஆதரவு பெற்ற அரசு மேலும் இல்லை , அந்த இயக்கம் உடையவுமில்லை.

ஒரு இயக்கம் எப்பொழுது உடையும் சுயநல கும்பல் உருவாகி கட்சியினை தனக்கு சாதகமாக்கும்பொழுது உடையும்

ஆர்.எஸ்.எஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை, சுயநலம் என்பது அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை,சுயநலகும்பலுகுகு அங்கு இடம் இருப்பதாகவும் தெரியவில்லை

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் மாளிகை கட்டினார், பென்ஸ் காரில் பறந்தார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உழைப்பாளி பல்லாயிரம் கோடி முதலீடு செய்தார் என எங்காவது கேள்விபட்டதுண்டா?

அவர்களுக்கு பெரும் வாகன அணி கிடையாது, பெரும் செலவுகள் கிடையாது, பிரச்சார பெரும் மீடியாக்கள் கிடையாது, தெரிந்ததெல்லாம் உழைப்பு உழைப்பு மக்களிடம் உண்மை சொல்லுதல்

இளம்தலைமுறையினை சிந்திக்கவைப்பது எப்படி என செயலாற்றியதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிகபெரிய வெற்றி

அவர்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் நிலைதன்மைக்கும் தூய்மையான நாட்டுபற்று அன்றி வேறு இருப்பதாக எம்மால் கருதமுடியவில்லை

இன்றைய இந்தியாவினை ஆளும் சக்தி அவர்களே, கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவர்களுக்கு எதிரிகள் இருப்பதாகவும் தெரியவில்லை

இந்தியா எனும் உறங்கிய மாபெரும் அரக்கனுக்கு , பெரும் சக்திக்கு உயிர்கொடுத்த இயக்கம் அது, இத்தேசம் இன்று அப்படி பெரும் சக்தியாய் எழும்புகின்றது

இன்று அவர்களுக்கு ஆண்டுவிழா வாழ்த்துக்கள்

அவர்களின் ஆண்டுவிழாவில் வாழ்த்துக்கள், அவர்கள் வட இந்தியாவில் செய்வதை தென்னகத்தில் செய்து வலுவான அடிதளம் அமைத்திருகின்றார்கள் இங்கும் விரைவில் தாமரை மலரும்

இஸ்லாமியரும், தாழ்த்தபட்டோரும் நிரம்பிய உபியில் அவர்களால் வெற்றிபெற முடிந்தது என்றால் சில துல்லிய கணக்கு விட்டுகொடுத்தல்களை செய்கின்றார்கள், மாயாவதியினை கன்ஷிமாராமை அவர்களால் அடிக்கமுடிகின்றது என்றால் செய்யும் மாய வேலைகள் ஏராளம்

அதை ஏன் தமிழகத்தில் அவர்களால் செய்யமுடியாது, நிச்சயம் முடியும்

அகத்த்தியர் முதல் நாயன்மார்களும், ஆழ்வார்களும் அடியார்களும் ரமன ரிஷியும் வாழ்ந்த இந்த மண் எளிதில் தன்னை விடுவிக்கும் , ஆர்.எஸ்.எஸ் அந்த அதிசயத்தை செய்யும்

1950 போல் அல்லாமல் இன்று இந்து எதிர்ப்பு குரல்கள் தமிழகத்தில் இல்லை என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்க வெற்றி

நாங்கள் இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல என திமுக அலறுவது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வெற்றி

1940களில் பெரிய புராணத்தை கொளுத்தி கம்பராமாயணத்தை அன்னை மீனாட்சியினை மகா மட்டமாக விமர்சித்த கோஷ்டி, 1971ல் ராமர்படத்தை செருப்பால் அடித்த கோஷ்டி இப்பொழுது பம்மி கிடக்கின்றது அல்லது அவர்கள் ஒருவார்த்தை பேசினாலும் பல கற்கள் அவர்கள் மேல் விழுகின்றன என்றால் அது அர்.எஸ்.எஸ் இயக்க வெற்றி

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூலம் ஒன்றும் விஷம் அல்ல, அது ஞான விஷயத்தின் தொடர்ச்சி

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என்பவர்தான், நாட்டுபற்றுள்ள 100 இளைஞர்களை கொடுங்கள் தேசத்தை நான் மாற்றுகின்றேன் என சொன்ன அவர்தான்

ஆன்மீகத்திலும் இம்மண்ணின் கலாச்சாரத்திலும் ஊறியவர்களால் மட்டுமே இம்மண்ணை காக்க முடியும் மீட்க முடியும் என சொன்ன அந்த விவேகானந்தர்

நான் ஆன்மீக தீயினை பற்றவைக்கின்றேன் அது எல்லா விடுதலையினையும் இங்கே கொடுக்கும் என சொன்ன அந்த ஞானமகன்…

அவர்காட்டிய வழியில்தான் மிக சரியாக சென்றுகொண்டிருக்கின்றது ஆர்.எஸ்.எஸ் இயக்கம். ஞானிகள் மகான்களின் வார்த்தை பொய்யாகா

அது இன்று நடந்துகொண்டிருகின்றது, விரைவில் அவரின் கனவு பூரணத்துவம் அடையும், இத்தேசம் காவிகொடி பறக்கும் முழு பாரத தேசமாக அதிவிரைவில் மாறும்

இந்திய வரலாற்றை திருப்பி உருவாக்கிய ஒரு மிகபெரும் சக்தி மிக்க இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இன்றைய காவி இந்தியா அதாவது சாணக்கியன் காலம் முதல் வீரசிவாஜி காலம் வரை எதைகாண வேண்டும் என தேசம் போராடியதோ அந்த இந்தியா அவர்களால்தான் சாத்தியமாகியிருக்கின்றது

ஆர்.எஸ்.எஸ் வரலாற்றில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் அவர்கள் வன்முறை கட்சி அல்ல, அவர்களின் தலைவர்கள் சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யா போன்றோர் கொல்லபட்டபோதும் அது வன்முறையில் இறங்கவில்லை

இந்தியா முழுக்க எவ்வளவோ ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கொல்லபட்டபோதும் அது வன்முறையில் இறங்கவில்லை

தமிழகத்திலும் கேரளத்திலும் அது பெரும் தொண்டர்களை கொடூரமாக இழந்தபோதும், தமிழகத்தின் சென்னையில் அவர்கள் அலுவலகமே தகர்க்கபட்டு 11 பேர் இறந்தபொழுதும் அது அமைதிதான் காத்தது

காரணம் வன்முறையும் அடிதடியும் தேசத்தை நாசமாக்கும் தேச சொத்துக்களை தேச மக்களை நாசமாக்கும் என அமைதிகாக்கும் இயக்கம் அது

அவர்கள் உழைப்பெல்லாம் இந்திய திருநாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது, பலமான இந்தியாவினை உருவாக்குவது, இந்துக்களை இந்துக்களாக் உணரவைப்பது

ஆம் அந்த வேலையினை மட்டும்தான் செய்தார்கள், செய்கின்றார்கள், செய்துகொண்டே இருக்கின்றார்கள்

நேற்றுபோல் இன்றும், இன்றுபோல் நாளையும், நாளைபோல் நாளை மறுநாளும் அவர்கள் பணி மாறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும்

இந்த நாட்டின் அதிசிறந்த பிரதமர்களான வாஜ்பாயும் , மோடியும் அவர்கள் வளர்ப்பே, ஊழலற்ற அமைச்சர்களெல்லாம் நிர்மலா போன்ற அமைச்சர்களெல்லாம் அவர்கள் உருவாக்கமே

ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவினை காத்து நிற்கும் அமைப்பு. அப்படி ஒரு அமைப்பு உருவாகி இவ்வளவுக்கு வளர்ந்திருக்காவிட்டால் இந்நேரம் இந்தியா என்றொரு நாட இருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்

காஷ்மீர் , கிழக்கு மாகாணம், வட இந்திய சாதி சிக்கல் என எவ்வளவோ விஷயம் அவர்களால் தீர்க்கபட்டு தேசம் பலமாகியிருக்கின்றது

மேற்கு வங்கத்தில் பெரும் மாற்றம் தென்னகத்தில் வளர்ச்சி என தேசம் அவர்களால் பலமாகின்றது

கம்யூனிஸ்டுகளை ஒழித்து தேசத்தை மீட்டதிலும் திமுக போன்ற கட்சிகளை அடக்கி வைத்திருப்பதிலும் அவர்கள் பங்கு உண்டு

அது இந்துக்களுக்கான இயக்கம் என்பதும் சரியல்ல, அது இந்தியாவின் தேசிய இயக்கம் அந்த இயக்கத்தில் எல்லா மதத்தவரும் உண்டு

அது யாருக்கும் எதிரியான இயக்கமும் அல்ல, சமீபத்தில் கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதற்றமான நேரத்தில் டெல்லி இமாமை சந்தித்து தேசத்தில் அமைதி நிலைக்க வழிசெய்தது கூட நடந்தது, அடிக்கடி இது நடக்கும் காட்சி

இன்று வலுவான பாரத்த்தை கட்டி எழுப்பி காஷ்மீரை சேர்த்து காசியினை மீட்டு ராமர்கோவிலும் கண்டு வெகு பலமாக ஒற்றுமையாக தேசத்தை எழுப்பிவரும் அந்த தன்னலமற்ற தொண்டர்களுக்கு , ஞானி விவேகானந்தர் வழிபடி நடக்கும் அந்த தர்ம சேனைக்கு இந்தியனாய் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

“அக்கினி குஞ்சொன்று கண்டேன்” என பாரதி சொன்ன வரி அவர்களால்தான் நிறைவேறிற்று