ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி
அதாவது அன்னார் முதல்வர் பதவிக்கு நகர்கின்றார், இவர் வென்றுவிட்டால் பழனிச்சாமி தொகுதியில் அடுத்த இடைத்தேர்தல் எதிர்பார்க்கலாம்
தமிழகத்தில் இப்படி முதல்வருக்கான இடைத்தேர்தலை அதிமுக ஆரம்பித்து வைத்து வெற்றிகரமாக நடத்தியும் வருகின்றது
வாக்குகள் சிதறிகிடக்கும் வேளையில் , கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் அன்னார் ஏன் இந்த விஷபரீட்சையில் இறங்குகின்றார் என தெரியவில்லை. தோற்றால் நிம்மதியாக சிங்கபூர் ஓடிவிடலாம் எனும் ஐடியாவும் இருக்கலாம்
ஆனால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என அவர் சொல்வதுதான் விசித்திரம்
இதனை சுருக்குங்கள்….
50 ஆயிரம், வாக்கு…50 ஆயிரம், வாக்கு என காதில் திரும்ப திரும்ப ஒலிக்கின்றதா?
ஆர்.கே நகர்வாசிகள் என்னது? வாக்குக்கு ஐம்பதாயிரமா? என கனவுகாணாமல் இருந்தால் நல்லது…
உனக்கு வேலையே இல்லையா, எப்படி எழுதுகிறாய் என என்ன நேரத்தில் கேட்க தொடங்கினார்களோ தெரியாது, அப்படித்தான் இன்பாக்ஸில் ஓடி வந்து கேட்டுகொண்டே இருந்தார்கள்.
அவர்கள் மனம் குளிரும்படி தலைநிறைய வேலை குவிந்துவிட்டது, அள்ளி கொடுத்துவிட்டார்கள், மூச்சுவிடுவது கூட சிரமம்
இப்பொழுது சந்தோஷமா?
எம்.ஆர் ராதா ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் “பாவி பயலுக..ஏதோ சும்மா 4 வரி எழுதுறதுக்குள்ள நீ சும்மாவே இருக்கியான்னு அடிக்கடி கேட்டானுக, அவனுகளா சாபம் போட்டனுக
இந்த பயலுக வயித்தேரிச்சல் சும்மா விடாது போலிருக்குடா எப்பா….”
ஆனாலும் ஒரு மனிதன் வேலை பற்றி ஒருகாலமும் அஞ்சக்கூடாது, சலிக்க கூடாது ஒரு நேரத்தில் பல வேலைகளை செய்பவனே திறமையான மனிதன் என கலைஞர் அன்றே போதித்திருக்கின்றார்.
சொன்னபடி செய்தும் காட்டினார்..
அவரை ரசித்தவர்களுக்கு எல்லாம் மகா சுலபம் ……..