ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன்

ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன்
பரவாயில்லை பாஜக கொஞ்சமாவது யோசித்திருக்கின்றது, தமிழகத்தில் கட்சியினை வளர்க்க முயற்சிக்கின்றது, ஒரு தேசிய கட்சி இந்த அளவில் முயற்சிப்பது வாழ்த்துகுரியது
அதுவும் தான் பார்ப்பண இந்துத்வா எனும் அடையாளத்தை மாற்றி தமிழகத்தில் பொன்னார், கங்கை அமரன் என தாழ்த்தபட்டவர்களை முன்னிறுத்துவது அதன் தேர்தல் தந்திரம் கூட, எப்படியோ நல்லது நடந்தால் சரி.
காங்கிரஸ் என்றொரு தேசிய கட்சி உண்டு, அது தமிழகத்திலும் உண்டு, அதில் ஏகபட்ட கோஷ்டிகளும் உண்டு. இந்த கோஷ்டி சண்டையினையினாலே டெல்லி எப்படியும் நாசமாய் போங்கள் என சொல்லிவிடுகின்றது
இதே ஆ.கே நகரில் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தபடும் என அறிவிப்பு வரட்டும், அவ்வளவுதான் சத்தியமூர்த்திபவனின் ஒரு டஜன் கோஷ்டிகளும் 12 வேட்பாளர்களோடு களத்திற்கு வரும், தொண்டர்களை விட அங்கு தலைவர்கள் அதிகம், பின் உருப்படுமா?
ஒன்று செய்யலாம்
பாஜக கங்கை அமரனை அறிவித்திருப்பது போல, காங்கிரஸ் குஷ்பூவினை அறிவிக்கலாம்
அப்படி அறிவிக்கபட்டால் குஷ்பூ 1 லட்சம் வோட்டுவித்தியாசத்தில் அபார வெற்றி பெறுவார்
ஆனால் காங்கிரசார் செய்யமாட்டார்கள், கோஷ்டிகள் வளர்ந்தால் போதும் கட்சி ஏன் வளரவேண்டும்? எனும் சிந்தனையில் இருப்பவர்கள் அவர்கள்
வெற்றி வேண்டுமானால் குஷ்பூவினைத்தான் நிறுத்தவேண்டும், அவர் நின்றாலே கிட்டதட்ட தேர்தல்முடிவு வந்ததற்கு சமம்..