ஆலயத்தின் கோபுர சிலைகளுக்கும் குறிவைத்துவிட்டன

ஏன் இவர்கள் திடீரென கர்ப்பகிரகத்தை விட்டுவிட்டு அதாவது ஏன் எல்லோரும் கர்ப்பஹிகரகத்தில் நுழைய கூடாது எனும் கோஷத்தைவிட்டு விட்டு இன்னும் பல வகையான புரட்சி குரல்களை விட்டுவிட்டு ஆலய கோபுரத்து சிலைகளுக்கு சென்றுவிட்டார்கள் என்றால் விஷயமிருக்கின்றது

இங்கு எவ்வளவு சிலைகளை கடத்தமுடியுமோ கடத்திவிட்டார்கள், கடத்தியவை மீட்கபடுகின்றன. என்பது வேறுவிஷயம்

இனி கடத்த சிலைகள் இல்லை இருக்கும் சிலைகள் பாதுகாப்பாய் இருக்கின்றன என யோசித்த கோஷ்டிகளுக்கு ஆலய கோபுர சிலைகள் நினைவுக்கு வந்தன‌

ஆலயத்தின் உள்ளே மொட்டை அடித்துவிட்டோம், இந்த கோபுர சிலைகள் எவ்வளவு அழகானவை அதே நேரம் ஏராளமானவை, இவைகளை கொள்ளை அடிப்பது கடினம். கோபுரத்தின் மேலே ஏறி திருடமுடியாது, என்ன செய்யலாம்

ம்ம் காக்காவிடம் நரி வடை வாங்கிய கதைதான். அவை அசிங்கம் ஆபாசம் என கத்துவோம் உடனே அவர்களாக ஆலய கோபுர சிலைகளை அகற்றுவார்கள், நாம் நல்ல விலைக்கு விற்றுவிடலாம், எப்படி ராஜதந்திரம் என மீசையினை முறுக்கிவிட்டு வந்துவிட்டார்கள்

ஆம், ஆலய கோபுரங்களின் சிலைக்கு இழிவு பேசும் கோஷ்டிகள் சிலைகடத்தும் கும்பல்களாக இருக்கலாம். இங்கு ஆபாசம் அசிங்கம் என்பார்கள் ஆனால் அவை விலைமதிப்பில்லாதவை

ஒவ்வொரு சிலையினையும் பல கோடிகளுக்கு வாங்க மேற்குலகம் தயாராக இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும்

“இந்திய கலை பொக்கிஷங்களை அபகரிக்க வேண்டுமென்றால் அவற்றை உன் கைகூலிகள் மூலம் மதிப்பற்றதாக்கு, சமஸ்கிருத சுவடிகள் குப்பை என வீதியில் எறியபடட்டும், ஆலய சிலைகள் முச்சந்திக்கு அப்பால் வீசபடட்டும், உன் கைகூலி மூலம் அதனை செய்

பின் அந்த பொக்கிஷங்களை வெறும் குப்பை என அள்ளிவந்து இங்கு அந்த மாபெரும் விஷயங்களை உனதாக்கிகொள்” என்பது பிரிட்டன் இந்தியாவினை பற்றி கொண்டிருக்கும் கொள்கை

ஆக தமிழர்களே, ஏற்கனவே கடவுள் இல்லை என சொல்லி ஆலயசிலைகளை மக்களிடம் மதிப்பிழக்க வைத்து அவற்றை பலநூறு கோடிக்கு விற்ற கும்பல்கள்

உண்டு.

கறுப்பு சட்டை முதல் அடங்க மறு எல்லாம் அவற்றின் கைகூலிகள்

அந்த கும்பல் ஆலயத்தின் கோபுர சிலைகளுக்கும் குறிவைத்துவிட்டன, ஆக இந்து மக்களே அவர்களிடம் கவனமாக இருங்கள்