ஆளுநரை சந்திக்கின்றார் எச்.ராசா : செய்தி
ஆளுநரை சந்திக்கின்றார் எச்.ராசா : செய்தி
எச்.ராசா அமைச்சரும் அல்ல, தேர்தலில் நின்று 4 வாக்கு வாங்கியவரும் அல்ல. சர்ச்சைகளின் மொத்த உருவான ஒருவரை ஆளுநர் ஏன் சந்திக்க வேண்டும்?
அவர் நிம்மி ஆண்டி தவிர எல்லோரையும் சந்திப்பார் போல
இருவரும் சந்திக்கும்பொழுது அங்கே ஆளுநர் மாளிகை வளாகத்தில் எஸ்கேப் சேகர் மாறுவேடத்தில் பார்த்து சிரித்தாலும் ஆச்சரியமில்லை
அப்படி இந்த இருவரும் சந்தித்து பேச என்ன இருக்கின்றது? என்ன அவசியம் வந்தது? ஒன்றுமில்லை
ஆளுநர் மாளிகை என்பது சாமியார் மடம் ஆகிகொண்டிருக்கின்றது
சரி இருவரும் என்ன பேசுவார்கள்?
“உனக்கு நாக்கில் சனி, எனக்கு விரலில் சனி இருவரும் சேர்ந்து என்ன பரிகாரம் செய்யலாம்?”
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது: தமிழக கவர்னர் பேட்டி
முரண்பாடு ஏற்படாது என இவர் திரும்ப திரும்ப சொல்வதுதான் முரண்பாடான செய்தி
ஒரு பேராசிரியையின் விவகாரத்திற்கு இவர் ஏன் இந்த பதற்றம் கொள்ள வேண்டும்?