ஆழ கவனிக்காமல் புரியாது
அஜித்குமார் நடிகர் என்பதை கூட எம்மால் ஒப்புகொள்ள முடியாது, சிலருக்கு அவர் அழகாக தெரியலாம் அதுதான் விஷயம்
மற்றபடி அந்த அலைபாயுதே படத்தில் அஜித் ஏன் ஒப்பந்தம் செய்யபடவில்லை எனும் கேள்வியினை மணிரத்னம் எப்படி கடந்து சென்றாரோ அப்படித்தான்
ஆனால் அவருக்கு கொடுக்கபடும் பிம்பமும் இன்னும் பலத்த வெளிச்சமும் இப்போதைக்கு அல்ல பின்னாளைய கணக்கு கொண்டவை
ராஜாஜிக்கு பின் பிராமண சமூகத்துக்கு கிடைத்த பெரும் அடையாளம் ஜெயா
அவருக்கு பின் அச்சமூகத்தில் யாருமில்லை என்ற கவலையினை போக்க கமலஹாசனை வைத்து படாதபாடு படுகின்றார்கள்
கமலின் அரசியல் பிரவேசமும் அவருக்கு கிடைக்கும் மீடியா டிவி வெளிச்சமும் ஒரு கும்பலால் திட்டமிட்டு ஏற்படுத்தபடுபவை
இதே கணக்கில் அஜித்துக்கும் வெளிச்சம் இப்பொழுதே காட்டபடுகின்றது
நம்புகின்றீர்களோ இல்லையோ பின்னொரு நாளில் அவர் அரசியலுக்கு இழுக்கபடலாம், அதற்கான ஆயத்த வேலைகளை இப்பொழுதே திரைமறைவில் ஒரு கோஷ்டி செய்து வருகின்றது
சிலரின் கணக்குகள் துல்லியமும் தொலைநோக்கும் கொண்டவை, ஆழ கவனிக்காமல் புரியாது