ஆஸ்கர் விருதும் அரசியல் நடிகர்களும்…
இந்த ஆஸ்கர் கமிட்டி என்பது அப்பட்டமான இனவெறி கமிட்டி என்ற சர்ச்சை முன்பே வந்தது. மொக்கை நடிப்பு என்றாலும் வெள்ளையருக்கே கொடுப்பார்கள், தவிர்க்கவே முடியாபட்சத்திலும் சில அரசியலுக்காகவுமே ஆசியர்களுக்கும், கருப்பர்களுக்கும் கொடுப்பார்கள் என்றேல்லாம் சர்ச்சை உண்டு
அதில் மகா உண்மை இருக்கலாம் என்பது இப்பொழுது புரிகின்றது. எப்படி?
சிறந்த துணை நடிகருக்கான விருதை சாம் ராக்வெல் என்பவருக்கு கொடுத்துவிட்டார்களாம்
அப்படி என்ன துணை நடிப்பில் கிழித்துவிட்டார்?
உலகின் மிகசிறந்த துணை நடிகர்களில் பன்னீரும், பழனிச்சாமியும் உண்டு, அவர்களை விட என்ன ராக்வெல் நடித்தார்?
பன்னீர், பழனிச்சாமிக்கு அடுத்த்த துணை நடிகராக ஆளுநர் புரோகித் இருகின்றார்
இப்பொழுது பாஜக துணை நடிகர்களாக கமலும், ரஜினியும் பின்னி எடுக்கின்றார்கள். அதிலும் கமல் சூப்பர்
“ஏய் ஆஸ்கர் கமிட்டியே இவர்களில் ஒருவருக்கு மிக சிறந்த துணைநடிகர் என்ற பட்டத்தை கொடுத்துவிடு, கமலஹாசன் அப்படியாவது ஆஸ்கர் நாயகன் ஆகட்டும்”
அப்படியே சிறந்த நடிகர் எனும் பட்டத்திற்கு மோடியினை விட்டால் அகில உலகில் யாருமில்லை என்பதை சொல்லிகொள்கின்றோம்
இந்த காவேரி விவகாரத்தில் கூட மனிதர் கதவை அடைத்து ஒத்திகை பார்கின்றார் தெரியுமா?,
இனி ஆக்ஷன் என்றவுடன் எப்படி நடிப்பார் தெரியுமா?
அதனையும், நாடாளுமன்ற கூட்டத்தில் மோடி செய்யபோகும் பெர்பார்மன்ஸையும் பார்த்தபின் சிறந்த நடிகர் யார்? எனும் விருதை அறிவிக்குமாறு ஆஸ்கர் கமிட்டியினை கேட்டுகொள்கின்றோம்
“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கோ அலைகின்றார் ஞான தங்கமே, இவர் ஏதும் அறியாதடி ஞானதங்கமே.”
கேரளம், கர்நாடகத்திலும் தாமரை மலரும்: யோகி ஆதித்யநாத்
இவர் ஒருவர்தான் உண்மையினை பேசுவார் போலிருக்கின்றது, தமிழகத்தில் தாமரை மலரும் என்பதை எவ்வளவு அழகாக தவிர்த்திருக்கின்றார்
யதார்த்தத்தை உணர்ந்த ஒரே பாஜக பிரமுகர் இவர்தான்