இங்கிலாந்தின் இரண்டாம் இளவரசர் ஹாரி திருமணம் செய்துகொள்ள போகின்றார்
இங்கிலாந்தின் இரண்டாம் இளவரசர் ஹாரி, அவர் நமது ஊர் ராகுல் காந்தி, எஸ் ஜே சூர்யா வகை எல்லாம் அல்ல, சமத்தாக திருமணம் செய்துகொள்ள போகின்றார்
ஆடம்பரம் இல்லா எளிய திருமணமாம், மிக சில பிரபலங்கள் மட்டுமே அழைக்கபடுவார்களாம், பிரபலங்கள் வரிசையில் ஓபாமா மட்டுமே கடைசிக்கு முந்தைய பெயர் என்றால் அது எப்படிபட்ட வரிசை என நீங்களே பார்த்துகொள்ளுங்கள்
கடைசி பிரபலம் யார் தெரியுமா? பிரியங்கா சோப்ரா
மோடி கூட கலந்துகொள்ள முடியா அந்த விழாவில் இந்தியாவின் அடையாளமாக பிரியங்கா சோப்ரா கலந்துகொள்ள போகின்றார் எனும் செய்தி வியக்க வைக்கின்றது, எப்படி கிடைத்தது வாய்ப்பு?
பிரியங்கா பிரபலம் ஆன வகையில் மணப்பெண்ணுக்கு அவர் நெருங்கிய தோழியாம். அதனால் திருமணத்தில் மணப்பெண் தோழியாக செல்லும் அங்கீகாரத்திற்கு ராணி டிக் செய்துவிட்டாராம்
உண்மையில் மிகபெரும் கவுரவம் இது
இதில் ஒரு சிறிய சோகம் என்னவென்றால் டயனாவோ, வில்லியம் மனைவி மிடில்ட்டனோ இல்லை இந்த மணப்பென் மெர்கனோ குஷ்புவினை பார்த்திருந்தால் நிச்சயம் அரச குடும்பத்து இளவரசி தோழியாக குஷ்புவே இருந்திருப்பார்
ஆனால் அவர்கள் துரதிருஷ்டம் குஷ்பு மணப்பெண் தோழியாக கிடைக்கவில்லை, இந்த பிரியங்காதான் கிடைத்திருக்கின்றார்
என்ன சொல்வது? பிரிட்டிஷ் ராஜகுடும்பம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்