இடைத்தேர்தல் வர இடைஞ்சலாக இருப்பது யார்? நமது எம்.எல்.ஏ தான்…

ஆர்.கே நகரில் கொட்டபட்ட பணத்தை பார்த்து தமிழகமெங்கும் ஒருவித விபரீத திட்டம் உருவாகிவிட்டது என்கின்றார்கள்

அதாவது இப்பொழுதுள்ள காலகட்டங்களில் விலைவாசி உயர்வாம், ஒரு பண்டிகையினை கூட கொண்டாட முடியவில்லையாம்

எப்படி எல்லோரும் மகிழ்வாக இருக்கலாம் என சிந்தித்த பொதுநல வாதிகளுக்கு ஆர்.கே நகர் வழிகாட்டியிருக்கின்றது

“ஓஓ …இடைதேர்தல் வந்தால் பணம் கொட்டுமா? இடைத்தேர்தல் வர இடைஞ்சலாக இருப்பது யார்? நமது எம்.எல்.ஏ தான்.

சனியன் இருந்தும் ஒன்றும் ஆகபோவதில்லை அதனால் அவரை ஏதாவது செய்து அப்புறபடுத்திவிட்டால் நமக்கு இடைத்தேர்தல் வரும், ஒக்கி புயலாக கொட்டும் பணமழை” என்றெல்லாம் சிலர் திட்டமிடுவதாக சில செய்திகள் சொல்கின்றன‌.

“அதானே நாமளா பார்த்து அவரை எம்.எல்.ஏ ஆக்கினோம், நமக்கு பணம் வரும் வழியினை அவர் அடைத்துகொண்டிருந்தால் எப்படி?..” என சிலர் தூபமும் இடுகின்றார்களாம்

ஆக தமிழக எம்.எல்.ஏக்கள் மிகுந்த கவனத்தோடு இருக்கின்றார்களாம், மனுவில் கூட விஷம் தடவி கொடுத்து கொன்றுவிடுவார்களோ என அலறிகொண்டிருப்பதாக ஆதார பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன‌

பொங்கல் வேறு நெருங்குவதால் அவர்கள் மிகுந்த படபடப்பில் உள்ளார்களாம்.