இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என்பது எல்லாம் ஏற்றுகொள்ள முடியா வாதம்
இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என்பது எல்லாம் ஏற்றுகொள்ள முடியா வாதம் , இந்த சாதியில் பிறந்ததால் அரசு இதெல்லாம் கொடுத்தே தீரவேண்டும் என்பது என்னவகையான உரிமையோ தெரியவில்லை
திமுகவினரின் அரசியல் போல தேசத்தின் எல்லா துறைகளையும் நிறைத்து கொள்கின்றார்கள், இட ஒதுக்கீடு உரிமை சொல்பவன் எவனும் ராணுவத்தில் எனக்கான இட ஒதுக்கீடு எங்கே? தேசத்துக்காக சாக தயார் என சொல்லட்டும் பார்க்கலாம், சொல்ல மாட்டான்
மாறாக எங்கே சுகமாக பாதுகாப்ப்பாக அமர முடியுமோ அங்கே இட ஒதுக்கீடு என கேட்டு அடம்பிடிப்பது
இதெல்லாம் அபத்தம்
அறிவில் சிறந்த மேற்கு நாடுகளிலும் கட்டுபாடுகள் மிகுந்த சீனா போன்ற நாடுகளிலெல்லாம் இது சாத்தியமில்லை
ஏதோ மருத்துவதுறையில் இந்த சாதிக்கு செல்ல வேண்டியது இந்த சாதிக்காரனுக்கு சென்றது என சிலர் ஒப்பாரி வைத்துகொண்டிருக்கின்றனர்
அதெல்லாம் சரியல்ல, இந்த சாதி அந்த சாதி என்று பார்ப்பதை விட ஒரு இந்தியன் என பார்ப்பதே சரி
இந்த கோணத்தில் பார்த்தால் சாதிய அரசியல் ஒழியும், இந்தியன் எனும் உணர்வும் தேச ஒருமைபாடும் நிலைக்கும்