இதனால் ஹாரி வெளிவே வருவதும் சரியல்ல
கிபி 1534 வரை பிரிட்டன் அரசு போபாண்டவருக்கு கட்டுபட்டு இருந்தது, ஒழுங்கான கத்தோலிக்க தேசமாய் இருந்தது
அப்பொழுது எட்டாம் ஹென்றி எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்தான், நல்ல மன்னனாக இருந்தான், இந்த மார்ட்டின் லுத்தர் கிங் எனும் பிரிவினைவாதியினை மிரட்டி வைத்து போப்புக்கு காவல் இருந்தான் , போப்பும் அவன் “திருச்சபை பாதுகாவலர்” என பட்டமெல்லாம் கொடுத்தார்
மன்னனுக்கு மனைவியினை விவாகரத்து செய்ய கடும் விருப்பம் ஆனால் கத்தோலிக்க சட்டம் இடம் கொடுக்கவில்லை
அப்பொழுது கத்தோலிக்கம் உருப்படியாய் இருந்திருக்கின்றது, இக்காலம் போல பாதிரிகள் காமசேட்டை செய்யவில்லை, சிறுவர்களுக்கு ஞானஸ்நானனும் ஞானமும் மட்டும் கொடுத்திருகின்றார்கள்
காரணம் அன்று அமெரிக்கா என்றொரு சுதந்திர தேசமில்லை அவர்களுக்கு மன்னனுமில்லை. என்று மன்னன் இல்லா உல்லாச தேசமாக அமெரிக்கா மலர்ந்து எல்லா சுதந்திரங்களும் வந்ததோ அன்று கெட தொடங்கிற்று உலகம்
எட்டாம் ஹென்றிக்கு தன் மனைவி ஆரேகான் என்பவளை விவாகரத்து செய்ய ஆசை ஆர்கோலின் என்பவளை திருமணம் செய்ய விரும்பினான்
விவாகரத்து என்பது கத்தோலிக்கம் அனுமதிக்கா ஒன்று
இதனால் போப்பாண்டவரின் கத்தோலிக்கமே வேண்டாம், நான் அரசை விட்டு விலகுகின்றேன் என சொல்லி அரசிலிருந்து வெளிவந்தான் பின்பு பிரிவினை கிறிஸ்தவர் கத்தோலிக்கத்தை கைவிட்டு ஆங்கிலக்கன் எனும் திருச்சபை தொடங்கி அவனை அரசனாக்கினர்
ஆங்கிலிக்கன் பின்பு மெதடிஸ்ட் என பிரிந்தது , மெதடிஸ்ட் உடைந்து நொறுங்கி இன்று காணும் தெருவுக்கொரு சபை என்ற அளவில் வந்துவிட்டது
எல்லாவற்றுக்கும் காரணம் ஹென்றி மன்னனும் அவனின் காதலியான ஆர்கோலினும்
இதனால் மனமுடைந்த போப் பெண்ணால் கத்தோலிக்கத்தை விட்டு போன உன் வம்சம் பெண்ணால் அழியட்டும் என சாபமிட்டார்
போப் சரியான அரை சூரிய கிரகண நேரத்தில் சாபமிட்டிருப்பார் போலிருக்கின்றது, அவ்வப்போது கொஞ்சம் பலிக்கின்றது
பெண்களால் அந்த அரசுக்கு சிக்கலும் வரும் ஆனால் விக்டோரியா போல் பிம்பங்களும் வருவார்கள் , பின் எலிசபெத் வந்து நம்ம ஊர் கருணாநிதி போல் கடைசிவரை தலைவராய் இருந்து மகனை இளவரசாரகவே வைத்திருப்பார்
ஆனால் டயானா போல் சிலரால் சிக்கல் வரும், இப்பொழுது டயானா மருமகள் மேகன் என்பவரால் வந்திருக்கின்றது
மேகன் ஒரு நடிகை, சொல்லிகொள்ளும்படி பரம்பரையும் அல்ல, கலப்பு பரம்பரை. ஆரம்பத்தில் இருந்தே அவளை அரசகுடும்பம் ஒருமாதிரிதான் பார்த்தது
ஆனால் இளவரசர் ஹாரி அவள்மேல் வசந்தமாளிகை சிவாஜி வாணி பின்னால் அலைவது போல் அலைந்து “எனக்கு விசுவாசம் காட்ட ஆயிரம்பேர் உண்டம்மா, ஆனால் என் மேல் பாசம் காட்ட நீ மட்டும்தான இருக்கே” என சுற்றி சுற்றி வந்தார்
வசந்தமாளிகை காட்சி அங்கேயும் அரங்கேறிற்று
ஆனால் இந்த ஹாரி நல்லவர், கிட்டதட்ட எட்டாம் ஹென்றி சாயல். எனக்கு என்னை நம்பி வந்த பெண்ணே பெரிது , இந்த அரசும் ராஜ்யமும் அல்ல என பாகுபலி பிரபாஸ் போல் கிளம்பிவிட்டார்
இங்கிலாந்து ராணி எலிசபெத் இங்கிலாந்துக்கு மட்டுமல்ல, கனடா , ஆஸ்திரேலியா நியூசிலாந்து என சில நாடுகளுக்கும் ராணி
அவ்வகையில் கனடாவில் ராஜகுடும்பமாக அவர்கள் வசிக்கலாம்
இதனால் கண்ணை கசக்கிவிட்டு லண்டனில் இருந்து கனடா சென்ற மேகன் அங்குதான் வசிகின்றார், இனி ஹாரியும் அங்கே செல்வாராம்
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் ஹாரி
இதை அடுத்து ராஜமாதா எலிசபெத்தும் , இங்கிலாந்து செயல்தலைவர் சார்லஸும் அங்குள்ள ராசாத்தியம்மாளான கமீலா பார்க்கரும் கடும் ஆலோசனை நடத்திகொண்டிருக்கின்றார்கள்
“ஹாரி உனக்கு பாரம்பரியமிக்க இங்கிலாந்து மன்னர் எனும் பட்டம் வேண்டுமா இல்லை வஞ்சகி மேகன் வேண்டுமா?” என ராணி கேள்வி கேட்டார்
அருகே “நானே இன்னும் மன்னன் ஆகவில்லையம்மா.” என ஊன்றுகோலை பிடித்து அழுதுகொண்டிருந்தார் சார்லஸ், அவரை கமீலா தேற்றினார்
“பாட்டி எனக்கு லண்டனும் நீங்களும் முக்கியம் ஆனால் மேகன் அதைவிட முக்கியம்” என சொல்லிவிட்டார் ஹாரி
ஆலொசனை நீடிக்கின்றது, பாட்டிக்கு பேரனை விட மனமில்லை. செம்பருத்தி பானுமதி போல தவித்துகொண்டிருக்கின்றார்
கனடாவோ “வந்தாய் அய்யா. வந்தாய் அய்யா” என ஹாரியினை வரவேற்க தயாராகின்றது
பல்வாள்தேவனாக சிரிக்கின்றான் வில்லியம்
தேவசேனையாக கொதித்துகொண்டிருக்கின்றாள் மேகன்
ஹாரியினை அப்படி விடமுடியாது, ஏகபட்ட தீவிரவாத இயக்கம் முதல் பிரிட்டன் அரசகுடும்ப எதிரிகள் வரை அவருக்கு அச்சுறுத்தல் அதிகம்
ஏன் நாம் தமிழர் தும்பியே அவருக்கு அதிகாரம் இல்லையென்றால் “ஏண்டா கட்டபொம்மனை தூக்குல போட்டு, ஈழத்தை பிடிச்சி சிங்களவன்ட கொடுத்தது உன் முப்பாட்டன் தானே” என உறுமிகொண்டிருக்கும்
இதனால் ஹாரி வெளிவே வருவதும் சரியல்ல

வசந்தமாளிகை முதல் பாகுபலி வரை அதே காட்சிகள் நடந்து கொண்டிருகின்றன, அரச குடும்பத்து கதைகள் எப்பொழுதும் இப்படித்தான்
ஆக அந்த போப்பாண்டவர் அவ்வப்போதுதான் பலிக்கின்றது, மனிதர் ஒழுங்காக ஜெபிக்கவில்லை போல, நம்ம ஊர் ஜெகத் கஸ்பர் போல அரைகுறை பாதிரியாக இருந்திருக்கின்றார்