இதற்கெல்லாம் என்ன காரணம்?
ஈரானும் ஈராக்கும் செழிப்பான நாடுகள், வளங்களுக்கு குறைவில்லை
ஆட்சிமாற்றத்துக்கு பின் தங்களுக்குள் மோதின , பின்னணியில் இருந்தது அமெரிக்கா
பின் ஈரானை விட்டுவிட்டு ஈராக்கை குறிவைத்து அடித்தது அமெரிக்கா, ஈராக் நாசமானது அதற்கு தலைவனுமில்லை நல்ல வழிகாட்டியுமில்லை
நிலைகுலைந்த ஈராக்கை பார்த்துகொண்டே ஈரானையும் தன் நாடகங்கள் மூலம் திணறடித்து அதையும் குழப்பியாயிற்று
இன்று ஈராக்கிலும் ஈரானிலும் உள்நாட்டு போராட்டங்கள் கட்டுபடுத்தமுடியா அளவு செல்கின்றது
இதற்கெல்லாம் என்ன காரணம்? அவற்றின் வளம் ஒருபக்கம் இருந்தாலும் அந்நிய அமெரிக்காவின் கைகூலிகள் இரு தேசங்களிலும் அதிகம்
அவர்கள் மக்களை ஒன்றுசேர விட மாட்டார்கள், இல்லா சித்தாந்தம் பேசுவார்கள், குழப்பங்களை உண்டாக்குவார்கள் நாட்டை நாசமாக்குவார்கள்
ஈராக் நிலை குலைந்து கிடக்கின்றது, ஈரான் அந்நிலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது
சொந்த நாட்டு அபிமானமும், சுயபுத்தியும் , எதிர்கால திட்டமிடலும் இல்லா கூட்டத்தை அந்நிய கைகூலியாக்குதல் எளிது அந்நாட்டை நாசமாக்குதல் எளிது
இந்தியாவிலும் அதை செய்ய சில கும்பல்கள் கடும் முயற்சி செய்கின்றன, ஆனால் அவைகளின் முயற்சி ஒரு காலமும் வெற்றிபெறாது..
உலக நிலவரங்களை பார்த்து இந்தியராகிய நாம் பாடம் கற்க வேண்டும்
இந்தியாவே நமக்கான பாதுகாப்பு, அத்தேசம் வலுவாக நிற்பதே நம் நல்வாழ்வுக்கான அஸ்திவாரம்