இதில் பாதி உண்மை உண்டு, பாதி பயமும் உண்டு
இந்தியாவின் மிக பழமையான கிறிஸ்தவ சபை கேரளாவின் சிரியன் மலபார் திருச்சபை
அவர்கள் மிக பலத்த எச்சரிக்கையினை செய்திருக்கின்றார்கள், கேரள கிறிஸ்தவ பெண்களை சில ஐ.எஸ் பயங்கரவாதிகள் லவ் ஜிகாத்தில் வீழ்த்தி மூளை சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர் என ஆலயத்திலே அறிக்கை வாசிக்கின்றனர்
இதில் பாதி உண்மை உண்டு, பாதி பயமும் உண்டு
ஆம், ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஊடுருவது கடினம் இதனால் கிறிஸ்தவ பெண்களை மணந்து அந்த போர்வையில் ஊடுருவுகின்றனர் என்பது முன்பே வந்த செய்தி
சீரியன் மலபார் என்பது மேற்காசியா தொடர்புடைய சபை என்பதால் ஐ.எஸ் போன்ற இயக்கங்களில் அப்பெண்களை தொடர்புபடுத்துகின்றார்கள் என்பதும் இன்னொரு கோணம்
மதமாற்றம் என்பது இப்பொழுது கிறிஸ்துவத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு தாவுவதும் நடக்கின்றது அதையும் இங்கே தடுக்க எச்சரிக்கின்றார்கள்
சரிவிடுங்கள், நாம் விஷயத்துக்கு வரலாம்
கிறிஸ்தவ பெண்களை இஸ்லாமியர் மதமாற்றம் செய்கின்றனர் என்றதும் எவ்வளவு ஆத்திரம் பார்த்தீர்களா?
எவ்வளவு காலத்துக்கு முன்பே இங்குவந்து இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி காவல் இருந்தார்கள், அந்த கிறிஸ்தவர்களை இஸ்லாமியர் மாற்றினால் சும்மா விடுவார்களா?
இது கிறிஸ்தவர்கள் அலறினால் செய்தி, அவர்கள் ஆலயத்தில் வாசித்தால் அறிக்கை
இதுவே இந்து ஆலயங்களில் மதம் மாறாதீர்கள் என சொல்லி அறிக்கை வாசித்தால் அவன் பெயர் சங்கி, பாசிச பாஜக வெறியன், ஆரிய அடிவருடி, பார்பானிய அடிமை