இதுகளுக்கு சொன்னாலும் புரியாது

வடக்கே தாவுத் இப்ராஹிம் படமோ, இல்லை மசூத் அசாரின் படமோ பிடிக்க முடியா நிலையில் சீமான் எப்படி பிரபாகரனின் படம் பிடித்து திரிகின்றான் எந்த சக்தி அனுமதிக்கின்றது என பல குரல்கள் வருகின்றன‌

ஆக ஒரு ரகசிய அனுமதி சீமானுக்கு கிடைத்திருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிகின்றதல்லவா?

இதுதான் உலக அரசியல் இதோடு புலிகள் மறுவுருவாக்கம் பெறலாம் என இலங்கை அஞ்சி சில அவசர ஏற்பாடுகளை செய்வதையும் முடிச்சுபோட்டு பாருங்கள் சில விவகாரம் உங்களுக்கு புரியும்

எந்த நாடும் இன்னொரு நாடு தன் கட்டுபாட்டில் வர சில விஷயங்களை செய்யும், அதுபற்றி சாவுகள் அழிவுகள் இன்னபிற பற்றி கவலைபடாது, இதெல்லாம் உலக நீதி

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் என எல்லா நாடும் தன் தலையிடும் நாடுகளில் இதை ரகசியமாக செய்யும்

இந்தியா அப்படி ஏதோ செய்ய நினைக்கின்றது, இதெல்லாம் நாம் விளக்கமாக சொல்லமுடியாது ஆனால் சுருக்கமாக சொல்கின்றோம்

ஈழகுரல் இங்கு ஒலித்துகொண்டே இருக்க வேண்டும் அதை கொண்டு இலங்கையிடம் சில விஷயங்களுக்கு கடிவாளமிடமுடியும் என நம்புகின்றது இந்தியா

ஆனால் இங்கு குரல் எழுப்புவன் கருணாநிதி போல இல்லை ஜெயா போல பெரும் சக்தியாய் இருத்தல் கூடாது, அல்லக்கையாக அடிமுட்டாளாக இருக்க வேண்டும் ஆனால் படுபயங்கரமாக சீன் போடவேண்டும்

இப்படி சல்லடை போட்டு எடுக்கபட்டவர் அங்கிள் சைமன்

ஆக அவர் அப்படித்தான் பேசுவார், பிரபாகரன் படம் பிடிப்பார் இதை எல்லாம் மேலிடம் ரசிக்கும் , இலங்கையிடம் கண்ணை காட்டும், அதே நேரம் எப்பொழுது அங்கிளை மண்டையில் தட்டி உட்கார வைக்க வேண்டும் என்பதும் அதற்கு தெரியும்

வங்கதேசத்தில் இந்தியா அதை செய்தது, ஈழத்தில் அதை செயதது. நாம் ஒப்புகொள்கின்றோம் இந்திய உளவுதுறையின் திருவிளையாடல்கள் 2009 வரை இலங்கையில் உண்டு

யாரை உருவாக்குகின்றாயோ அவனை காரியம் முடிந்தவுடன் அழித்துவிடு இல்லையேல் அவன் உனக்கெதிராய் திரும்புவான் என்பது புராணத்தில் சிவனும் விஷ்ணுவும் சொன்ன பாடம்

மகாபாரத போரே இந்த தத்துவத்தில்தான் நடக்கும்

அப்படி அமெரிக்கா பின்லேடனை உருவாக்கி கொன்றது, அல்பத்தாதியினை கொன்றது

இந்தியா வங்கத்தில் செய்தது, பஞ்சாபில் கையினை சுட்டுகொண்டது ஆனால் அழித்தது, ஈழத்தில் கொன்றது

இப்பொழுது இந்திய உளவுதுறையிடம் சைமனும் அவரின் அடிபொடிகளும் வசமாக‌ சிக்கியிருக்கின்றன, தங்கள் கழுத்து மேல் இருக்கும் கோடாரி புரியாமல் ஆடுகின்றன‌

அவை பின்னொருநாளில் என்னபாடு படபோகின்றதோ தெரியவில்லை பரிதாபம், இதுகளுக்கு சொன்னாலும் புரியாது

ஒரு நாள் புல்டோசர் ஏற்றி அல்லது கொசுமருந்து தெளித்து ஒழிப்பார்கள், அது நிச்சயம் நடக்கும்