இதுதான் உலக ராணுவ‌ அரசியல்

இன்றைய தேதியில் பரபரபான விஷயங்கள் இரண்டு முதலாவது பாகிஸ்தானில் கால்வைக்கும் சீனா, இன்னொன்று துருக்கிக்கு அமெரிக்கா கொடுக்க மறுக்கும் எப் 35 விமான சண்டை

பாகிஸ்தான் விவகாரத்தில் என்னாயிற்று என்றால் , அந்த வைப்பாட்டி ஜாதக நாட்டை பலர் வைத்திருந்தாலும் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான நெருக்கம் இப்பொழுது கசந்துவிட்டது

இவள் நம்பமுடியாதவள் எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் அவளால் சில புத்திகளை மாற்றமுடியாது என உணர்ந்த அமெரிக்கா சட்டி சுட்டதடா என ராகத்தை மாற்றிவிட்டது

பாகிஸ்தானுக்கோ ஏகபட்ட பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் நிதிதிரட்டும் திட்டமும் பின்னடைவே, அவர்களுடன் உறவு வைத்து அவர்களின் குட்டிசாத்தான்கள் இங்கும் வந்து ஆட்டம் போட்டால் நாம் உண்ணும் நல்ல பிரியாணியில் மண் விழுமே என்பது பல அரபு நாடுகளின் கவலை

இதனால் வேறு வழியின்றி “அடைக்கலமானேன் முடிவினிலே” என சீனாவிடம் சரணடைந்துவிட்டது பாகிஸ்தான், சீனா இன்னும் ஏகபட்ட பணம் வழங்குமாம் கூடவே சீன கடற்படை பாகிஸ்தானுக்கு வருமாம்

உலகிலே சீனாவுக்கு அடுத்து அவர்கள் ராணுவதளம் உள்ள இடம் ஆப்ரிக்கா பக்கம், இப்பொழுது இரண்டாம் தளத்தை பாகிஸ்தானில் அமைக்கின்றார்கள்

இது இந்தியாவுக்கு ஆபத்து கூடவே அமெரிக்காவுக்கும் ஆபத்து

ஆம் ஆப்கன் தளம், அமெரிக்க எண்ணெய் கப்பல் உலாவும் பகுதியில் , ஈரானை நொறுக்க அமெரிக்க கப்பல் சுற்றும் பகுதியில் சீனா நேரடியாக வந்து நிற்பதை இரு நாடுகளும் ரசிக்கவில்லை

இனி ஈரானின் சபஹர் துறைமுகத்தில் இந்திய படை நிறுத்தபடலாம், ஈரானிய இந்திய உறவுக்கு அமெரிக்கா பச்சை கொடியினை நிபந்தனையுடன் ஆட்டலாம்

அடுத்து துருக்கி கதை

அதாவது ஐரோபா மற்றும் நேட்டோவில் இருக்கும் ஒரே ஒரு இஸ்லாமிய நாடு துருக்கி, ஒருகாலத்தில் சோவியத் யூனியனை மிரட்ட அவர்களை சேர்த்தார்கள்

எல்லா அமெரிக்க தயாரிப்புகளும் அவர்களுக்கு உடனே கிடைக்கும் படி ஒப்பந்தம் உண்டு

இப்பொழுது அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் முட்டிகொள்ளும் காலம் என்பதால், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வாங்கும் முடிவினை கைவிடுங்கள் எம்மிடம் இருந்து எப் 35 மற்றும் பேட்ரியாட் சிஸ்டத்தை தருவோம் என்கின்றது அமெரிக்கா

இந்த இடத்தில்தான் உள்ளே குதிக்கின்றது ரஷ்யா, அமெரிக்க எப் 35க்கு ஈடாக எம்மிடம் சூ 57 ரக தயாரிப்பு உண்டு அதை துருக்கிக்கு கொடுக்க தயார் என்கின்றது அந்நாடு

விஷயம் விவகாரமாகின்றது

பழைய ஒப்பந்தபடி எப் 35 தந்தால் மகிழ்ச்சி தராவிட்டால் வருத்தமில்லை , எமக்கு ரஷ்யாவும் புட்டீனும் இருக்கின்றார்கள் என்கின்றார் துருக்கி ஜனாதிபதி எர்டோகன்

இந்த விவகாரம் சிக்கலானது, எப் 35 என்பது அமெரிக்க தயாரிப்பு என்றாலும் இங்கிலாந்து பிரான்ஸ் ஆஸ்திரேலியா என பல நாடுகளுக்கும் ஒப்பந்தபடி பங்கு உண்டு

இனி பங்காளிகளிடம் துருக்கி நியாயம் கேட்கலாம்

எது எப்படி ஆயினும் தன் சூ 57ஐ வெளிகாட்ட ஆரம்பித்துவிட்டது ரஷ்யா

ஒருவேளை இந்தியா இதை வாங்கினால் என்னாகும்?

ஒன்றும் ஆகாது இதே எப் 35 ரகமோ இல்லை எப் 117 ரகமோ உடனே பாகிஸ்தானுக்கு அமெரிக்காவால் வழங்கபடும் உலக அரசியல் இதுதான்

சரி ஒருவேளை எப் 35 விமானத்தை இந்தியா பிற்காலத்தில் வாங்கினால் என்னாகும், ரஷ்ய கரம் பாகிஸ்தான் பக்கம் நீளும் இதே சூ 57 அங்கு கொடுக்கபடும் என மிரட்டல் வரும்

இதுதான் உலக ராணுவ‌ அரசியல்

ஈராக், லிபியா, சிரியாவினை தொடர்ந்து சனி தன் இடதுகாலை வெனிசுலாவில் வைத்தாயிற்று

உலக அரசியலில் சனி என்றால் அமெரிக்கா, ஆம் அவரை போல கொடுப்பாரும் இல்லை கெடுப்பாருமில்லை

ஆனால் ரஷ்ய மிரட்டல் கடுமையாகின்றது, வெனிசுலாவில் அமெரிக்கா கால்வைத்தால்.. என அது சீற, நீ இதில் தலையிடாதே என மைக் பாம்பியோ எகிற நிலமை சிக்கலாகின்றது