இதுதான் வழி
சொன்னா கேளு புள்ள, திமுக கூட்டணியில இருந்து ஜெயிச்சாலும் நமக்கு ஒண்ணும் கிடைக்காது, ஒருவேளை சட்டமன்ற தேர்தல் வந்து ஜெயிச்சாலும் நமக்கு இடம் தரமாட்டாங்க
அங்க கட்சி பிரச்சினை கலைஞர் குடும்ப பிரச்சினைன்னு ஏக சிக்கல், தேர்தலுக்கப்புறம் நம்மள கண்டுகிட மாட்டாங்க
ஆனா இங்க அப்படி இல்ல, அந்தம்மா இல்ல இவங்கட்ட இருந்து நமக்கு தேவையானத வாங்குறது அவ்வளவு கஷ்டம் இல்ல புள்ள
இங இருந்தா நாளைக்கே தமிழகத்துல கூட்டணி ஆட்சி வந்தா நமக்கும் ஆட்சியில இடம் கிடைக்கும், திமுக ஆட்சி வந்தா கிடைக்குமா? சொல்லு புள்ள
இதுக்குத்தான் ராமதாஸும் இங்க வந்தாரு, நாமளும் போகுறோம்
மாமன நம்பு புள்ள, அங்க வைகோ பய வேற இருக்கான் பின்ன எப்படி ஜெயிப்பாங்க? ஜெயிச்சாலும் நமக்கு என்ன தருவாங்க?
மாமன் கணக்க்கு தப்பாது புள்ள, அரசியல்ல நிறைய சொத்த இழந்துட்டோம் இனி நம்ம புள்ளைகளுக்கு ஏதும் சேர்த்துவைக்க இதுதான் வழி புள்ள”